ரெயில்வே அமைச்சகம்

பயணிகள் வசதிக்காக பிரபலமான பகுதிகளை ரயில் நிலைய பெயருடன் இணைக்கும் புதுமையான அணுகுமுறையை இந்திய ரயில்வே பின்பற்றுகிறது

Posted On: 20 JUL 2023 5:35PM by PIB Chennai

பிரபலமான பகுதிகள் / நகரங்களுடன் சிறிய நிலையங்களை அடையாளம் காண்பது இப்போது எளிதானது

ரயில் நிலையத்தை மட்டுமல்ல, பயணத்தைத் திட்டமிடும்போது சரியான இடத்தையும் ரயில்வே காட்டும்

சிறிய ரயில் நிலையங்கள் பிரபலமான நகரங்கள் / பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன, அதாவது சாரநாத் பனாரஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, சபர்மதி அகமதாபாத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, பன்வெல் மும்பையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அணுகுமுறை பயணத்தின் சிறந்த திட்டமிடல் மற்றும் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் டிக்கெட் முன்பதிவில் தனிப்பயனாக்கப்பட்ட பயணிகள் அனுபவத்தை வழங்கும்

•           சுற்றுலாப் பயணிகளுக்கு, ரயில் நிலைய தேர்வை எளிதாக்குதல்

•           ரயில் நிலையங்களை இணைக்கும் செயற்கைக்கோள் நகரத்தை இணைத்தல் - எ.கா. நொய்டா முதல் புது தில்லி வரை

•           175 பிரபலமான நகரம் / பகுதி 725 நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது

•           இந்த வசதி 21.07.2023 முதல் கிடைக்கும்.

•          

சிறிய ரயில் நிலையங்களை பிரபலமான பகுதிகள் / நகரங்களுடன் பயணிகள்  அடையாளம் காணும் வசதிக்காக, இந்திய ரயில்வே ரயில்  நிலையத்தின் பெயருடன் பிரபலமான பகுதிகளை இணைக்கும் புதுமையான அணுகுமுறையைக் கையாண்டுள்ளது. இந்த புதிய அணுகுமுறை பயணத்தின் சிறந்த திட்டமிடல் மற்றும் வலைத்தளம் மற்றும் மொபைல் பயன்பாட்டில் டிக்கெட் முன்பதிவில் தனிப்பயனாக்கப்பட்ட பயணிகள் அனுபவத்தை வழங்கும். இதில் ரயில் நிலைய தேர்வு எளிதாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கும் வசதியாக இருக்கும். மேலும், பயணிகளுக்கு சிறந்த இணைப்பு கிடைக்கும்.  இந்த வசதி நாளை (21.07.2023) முதல் கிடைக்கும்.

இந்த முன்முயற்சியில் புறநகர் பகுதிகளை ரயில் நிலையங்களுடன் இணைப்பதும் அடங்கும் - எ.கா., நொய்டா மற்றும் புது தில்லி. சில நேரங்களில், உள்ளூர் / பிரபலமான பெயர்கள் ரயில் நிலைய பெயர்களிலிருந்து வேறுபடுகின்றன, இது பயண திட்டமிடலின் போது குழப்பத்திற்கு வழிவகுக்கிறது. இந்த இணைப்பு இது போன்ற குழப்பத்தை அகற்றும்.

 

இதற்காக தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, மேலும் 175 பிரபலமான நகரம் / பகுதிகள் 725 நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இ-டிக்கெட் முன்பதிவு வலைத்தளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்போது நிலையங்களை தேர்வு செய்யும்போது இந்த மாற்றங்களை காணலாம். பயணத் திட்டமிடல் மற்றும் மின்னணு முன்பதிவு சீட்டில் இந்த மாற்றங்கள் காண்பிக்கப்படும்.

 

 

இதன் மூலம் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள்:

•           ரயில் பயண திட்டமிடலில் பயணிகளுக்கு சிறந்த மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அனுபவம்

•           சுற்றுலா வசதி

•           சுற்றுலாப் பயணிகளுக்கு ரயில் நிலையத் தேடல் எளிது

•           காசி, காட்டு ஷியாம், பத்ரிநாத், கேதார்நாத், வைஷ்ணவ்தேவி போன்ற சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அருகிலுள்ள ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன

•           மேம்படுத்தப்பட்ட இணைப்பு

•           ரயில் நிலையங்களை இணைக்கும் புறநகர் பகுதிகளை இணைத்தல் - எ.கா., நொய்டா முதல் புது தில்லி வரை

•           குடிமக்களுக்கு பிராந்திய முக்கியத்துவம் மற்றும் பெருமை: ரயில் நிலையத்துடன் தொடர்புடைய பிரபலமான நகர பெயர் குடிமக்களுக்கு பெருமை மற்றும் உரிமை உணர்வை அளிக்கிறது.

 

செயல்பாட்டு / பராமரிப்பு காரணங்களால் புறப்பாட்டு நிலையத்தில் மாற்றம் ஏற்பட்டால், அதற்கு பதிலாக மாற்று ரயில் நிலையத்தை காட்டும்.

•           எடுத்துக்காட்டாக, வண்டி எண் 19031 [அகமதாபாத் -ஜெய்ப்பூர்] புறப்பாட்டு நிலையமான அகமதாபாத்திற்கு பதிலாக அசர்வா நிலையத்தை காட்டும். தற்போது இந்த செயல்பாடு தானியங்கி முறையாக்கப்படவில்லை. பயணிகள் தான் ரயில் நிலைய  தேர்வை செய்ய வேண்டும்.

மேலும், மேலாண்மை தகவல் அமைப்பு புதிய ரயில்கள் மற்றும் நிலைய வசதிகளை சிறப்பாக திட்டமிட உதவும்.

**********

Release ID: 1941082)

SM/TV/ KRS



(Release ID: 1941258) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Hindi , Punjabi