தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மாசுபாடு
Posted On:
20 JUL 2023 5:31PM by PIB Chennai
தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்.சி.ஆர்)காற்று மாசுபாட்டிற்கு காரணமான முக்கிய காரணிகளில், வாகன மாசுபாடு, தொழில்துறை மாசுபாடு, சாலைகள் மற்றும் திறந்த பகுதிகளில் இருந்து எழும் அதிக அளவிலான மானுடவியல் செயல்பாடுகள் அடங்கும், வாகன மாசுபாடு, தொழில்துறை மாசுபாடு, சாலைகள் மற்றும் திறந்த பகுதிகளில் இருந்து வரும் தூசி, கட்டுமானம் மற்றும் இடிப்பு திட்ட நடவடிக்கைகளிலிருந்து வரும் தூசி, உயிரி எரிப்பு, விவசாய கழிவுகளை எரித்தல், நகராட்சி திடக்கழிவுகளை எரித்தல், சுகாதார நிலப்பரப்புகளில் தீ மற்றும் சிதறிய குப்பை கிடங்குகளிலிருந்து காற்று மாசுபாடு, பட்டாசு வெடிப்பது ஆகியவை அடங்கும்.
நெல் வைக்கோல் எரிப்பு நிகழ்வுகளுக்கு எதிராக ஹரியானா மற்றும் பஞ்சாப் அரசாங்கங்களால் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் இழப்பீடுகள் பெறப்பட்டுள்ளன.
பயிர்க்கழிவுகளை எரிக்கும் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, பயிர்க்கழிவுகள்/ பரளிகளை துணை எரிபொருளாகப் பயன்படுத்துதல், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் ஆதாரம், சிறந்த காற்றின் தரம், கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் மேலாண்மை செய்வதற்கான கொள்கை தலையீடுகளின் சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்தது.
சாலைகளில் இருந்து மாசுபடுவதை கட்டுப்படுத்த, தில்லியில் இதுவரை, 11 'தூசி கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை பிரிவுகள்' அமைக்கப்பட்டுள்ளன. இப்பிரிவுகள் சாலைகளை துடைக்கும் இயந்திரங்களை முறையாகப் பயன்படுத்துதல், சேகரிக்கப்பட்ட தூசிகளை அறிவியல் பூர்வமாக அகற்றுதல், சாலைகளில் தண்ணீர் மற்றும் தூசிகளை தெளித்தல்/ பாதைகளின் வலப்புறம் தெளித்தல், துடைத்தல் மற்றும் தெளிக்கும் இயந்திரங்களை அதிகரித்தல், சாலைகளை முறையாக பராமரித்தல் மற்றும் சாலை பள்ளங்கள் இல்லாதவாறு வைத்திருத்தல், இயந்திரமயமாக்கப்பட்ட துப்புரவை முழுமையாக ஆதரிக்கும் வகையில் சாலைகள் அமைத்தல், நடைபாதை இல்லாத சாலைப் பகுதிகளை நடைபாதையாக மாற்றுதல் அல்லது பசுமையாக மாற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. மைய விளிம்புகளை பசுமையாக்குதல் / மரங்களை நடுதல், தொழில்துறை பகுதிகளில் சிமெண்ட் சாலைகள் அமைத்தல், சூடான இடங்களைக் கண்டறிதல் மற்றும் குறிப்பிட்ட சாலை தூசி கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை செயல்படுத்துதல் போன்றவை.
இத்தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
----
(Release ID: 1941074)
PKV/KRS
(Release ID: 1941257)
Visitor Counter : 119