புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
நாட்டில் 176.49 ஜிகாவாட் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது: மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங்
Posted On:
20 JUL 2023 6:37PM by PIB Chennai
புதுப்பிக்கவல்ல எரிசக்தி என்பது இயற்கை வளங்களிலிருந்து பெறப்பட்ட எரிசக்தியாகும். இது பயன்படுத்தப்படுவதை விட அதிக விகிதத்தில் மீண்டும் பெறப்படுகிறது. அத்தகைய எரிசக்தி ஆதாரங்களில் சூரியன், காற்று, நீர், உயிரி, புவிவெப்பம் போன்றவை அடங்கும். எரிசக்திக்காக இந்த ஆதாரங்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும்.
நாட்டில் புதுப்பிக்கவல்ல எரிசக்தியை மேம்படுத்த அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பின்வருமாறு:
தானியங்கி முறையில் 100 சதவீதம் வரை அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தல்.
2025 ஜூன் 30 ஆம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரவிருக்கும் திட்டங்கள் மூலமான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத்தை மாநிலங்களுக்கு இடையே விற்பனை செய்ய மாநிலங்களுக்கு இடையே கொண்டுசெல்லும் நடைமுறைக்கான (ஐ.எஸ்.டி.எஸ்) கட்டணங்கள் தள்ளுபடி,
2029-30 ஆம் ஆண்டு வரை புதுப்பிக்கவல்ல எரிசக்தி கொள்முதல் பொறுப்புக்கான (ஆர்பிஓ) வழிமுறைகளை அறிவித்தல்,
பிரமாண்டமான புதுப்பிக்கவல்ல எரிசக்திப் பூங்காக்களை அமைக்கும் புதுப்பிக்கவல்ல எரிசக்தி நிறுவனம் அமைபோருக்கு நிலம் மற்றும் பரிமாற்றம் வழங்குதல்.
பிரதான் மந்திரி கிசான் உர்ஜா சுரக்ஷா எவம் உதான் மகாபியான் (பிரதமர்- குசும்), மேற்கூரை சூரியசக்தி கட்டம் 2, 12000 மெகாவாட் சி.பி.எஸ்.யூ திட்டம் கட்டம் 2 போன்ற திட்டங்கள்,
புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை வெளியே அனுப்புவதற்காக பசுமை எரிசக்தி நடைபாதை திட்டத்தின் கீழ் புதிய மின் தொடரமைப்பு பாதைகள் அமைத்தல் மற்றும் புதிய துணை மின் நிலைய திறனை உருவாக்குதல்,
சூரிய ஒளி மின்னழுத்த அமைப்பு / சாதனங்களை நிலைநிறுத்துவதற்கான தரநிலைகளை அறிவித்தல்,
முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வசதி செய்வதற்கும் திட்ட மேம்பாட்டுப் பிரிவு அமைத்தல்.
மின்கட்டமைப்பு இணைக்கப்பட்ட சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை திட்டங்களிலிருந்து மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான கட்டண அடிப்படையிலான போட்டி ஏல செயல்முறைக்கு நிலையான ஏல வழிகாட்டுதல்கள்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஜெனரேட்டர்களுக்கு மின் பகிர்மான உரிமதாரர்கள் சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதற்காக கடன் கடிதம் (எல்.சி) அல்லது முன்பணம் செலுத்துவதற்கு மாறாக மின்சாரம் அனுப்பப்பட வேண்டும் என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பசுமை எரிசக்தி திறந்த அணுகல் விதிகள் 2022 மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான அறிவிப்பு.
மின்சார (தாமத கட்டணம், கூடுதல் கட்டணம் மற்றும் தொடர்புடைய விஷயங்கள்) விதிகள் (எல்.பி.எஸ் விதிகள்) அறிவிப்பு.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சாரத்தை பரிமாற்றங்கள் மூலம் விற்பனை செய்வதற்கு வசதியாக பசுமைக் கால முன்னோக்குச் சந்தையை (GTAM) அறிமுகம் செய்தல்.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் உபபொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றும் நோக்கத்துடன் தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடங்கப்பட்டது.
30.06.2023 நிலவரப்படி, நாட்டில் மொத்தம் 176.49 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் நிறுவப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
*****
SMB/KRS
(Release ID: 1941254)
Visitor Counter : 161