நிதி அமைச்சகம்
நிதிச் சேவைகள் துறையின் (DFS) செயலாளர், பொதுத்துறை வங்கிகள் மற்றும் பிற அமைப்புகளின் தலைவர்களுடன் நிதி உள்ளடக்கத் திட்டங்களின் கீழ் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்துகிறார்
Posted On:
20 JUL 2023 5:35PM by PIB Chennai
மத்திய நிதியமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை (டி.எஃப்.எஸ்) செயலாளர் டாக்டர் விவேக் ஜோஷி இன்று பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்களுடன் ஒரு மறுஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் நபார்டு வங்கித் தலைவரும் கலந்து கொண்டார்.
கூட்டத்தில்,பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா, பிரதான் மந்திரிஜீவன் ஜோதி பீமா யோஜனா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா, அடல் பென்ஷன் யோஜனா, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு சமூக பாதுகாப்பு (ஜன் சுரக்ஷா) திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.. நடப்பு நிதியாண்டிற்கான நிதிச் சேர்க்கைக்கான பல்வேறு திட்டங்களின் கீழ் பொதுத்துறை வங்கிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலக்குகளை விரைவாக அடைய வேண்டும் என்று டாக்டர் ஜோஷி வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின் போது, 01.04.2023 முதல் 31.07.2023 வரை நாட்டின்அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற்று வரும் பி.எம்.ஜே.ஜே.பி.ஒய் மற்றும் பி.எம்.எஸ்.பி.ஒய் திட்டங்களின்ஜன் சுரக்ஷாபிரச்சாரத்தின் முன்னேற்றம் குறித்து வங்கிகளுடன் டாக்டர் ஜோஷி விவாதித்தார். மேலும், வங்கிகளின் தலைவர்களை தொடர்ந்து முன்னேற்றத்தை மறுஆய்வு செய்யுமாறும், செறிவூட்டல் பிரச்சாரத்தின்இலக்குகளை அடைவதை உறுதி செய்யுமாறும் டாக்டர் ஜோஷி வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. விருப்ப தொகுதிகள் திட்டம் (ஏபிபி) குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், வங்கி வசதி இல்லாத பெரியவர்களை உள்ளடக்குவதற்கான செயல்திட்டம் தயாரிப்பதற்காக சிறப்பு மாவட்ட அளவிலான மறுஆய்வுக் குழு (டி.எல்.ஆர்.சி) நடத்துவது மற்றும் கடன் பற்றாக்குறை உள்ள மாவட்டங்களில் கடன் வழங்கும் பிரச்சாரம் தொடர்பான ஆலோசனைக் குழு கூட்டத்தின் முடிவுகளின் நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
****
(Release ID: 1941080)
ANU/SM/KRS
(Release ID: 1941235)
Visitor Counter : 129