சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
நயி மன்சில் திட்டம்
Posted On:
20 JUL 2023 5:02PM by PIB Chennai
திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், ஜவுளி அமைச்சகம், கலாச்சார அமைச்சகம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்கள் மூலம் சிறுபான்மையினர், குறிப்பாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினர் உட்பட அனைத்து தரப்பினரின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் குறிப்பாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் சமூக-பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நாடு முழுவதும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது.
முறையான பள்ளி மாற்றுச் சான்றிதழ் இல்லாத சிறுபான்மை இளைஞர்கள், அதாவது பள்ளி - இடைநிற்றல் பிரிவில் உள்ளவர்கள் அல்லது மதரசாக்கள் போன்ற சமூக கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் பயனடையும் வகையில், உலக வங்கியின் 50% நிதியுதவியுடன் நயி மன்சில் என்ற மத்திய அரசுத் திட்டத்தை சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் 2015, ஆகஸ்ட் 8 அன்று தொடங்கியது. இத்திட்டம் முறையான கல்வி (எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு) மற்றும் திறன்களின் பல்வேறு அம்சங்களை அளித்து, பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை பெற உதவியது. 1,00,000 மொத்த இலக்கில், அமைச்சகம் 99,980 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது, அவர்களில் 98,712 பயனாளிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது, மொத்தம் ரூ.456.19 கோடி செலவிடப்பட்டுள்ளது. மாநில வாரியாக / பாலின வாரியான பயனாளிகளின் விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க முகமைகளுக்கு வழங்கப்பட்ட நிதி ஆகியவற்றை அமைச்சகத்தின் www.minorityaffairs.gov.in. இணையதளத்தில் காணலாம், இத்தகவலை மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
****
(Release ID: 1941041)
LK/IR/KPG/KRS
(Release ID: 1941208)
Visitor Counter : 148