ஜவுளித்துறை அமைச்சகம்

2030-ம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான செயல்திட்டம் குறித்து பியூஷ் கோயல் ஆலோசனை

சர்வதேச சந்தையில் இந்தியாவை நிலைநிறுத்த கூட்டு அர்ப்பணிப்பு தேவை: ஜவுளி அமைச்சகத்தின் சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் திரு. கோயல்

Posted On: 19 JUL 2023 9:29PM by PIB Chennai

மத்திய ஜவுளி, நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல், 2030-ம் ஆண்டிற்குள் 250 பில்லியன் டாலர் ஜவுளி உற்பத்தி மற்றும் 100 பில்லியன் டாலர் ஏற்றுமதி என்ற இலக்கை அடைவதற்கான செயல்திட்டம் குறித்து விவாதித்தார்.

ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடிய திரு. கோயல், சர்வதேச போட்டியை எதிர்கொள்ளத் தயாராகும் வகையில் ஜவுளித் துறையை மிகவும் துடிப்பு மிக்கதாக மாற்றுவதற்கான முழுமையான அணுகுமுறையை வலியுறுத்தினார். புத்தாக்க ஆலோசனைகளைக் அறிமுகப்படுத்தும்படி அதிகாரிகளைக் கேட்டுக் கொண்ட அவர், சிறந்த சேவை வழங்கலுக்கான நிறுவன கட்டமைப்பை நெறிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

ஜவுளித்துறை அமைச்சகம் ஜூலை 18-ம் தேதி அன்று ஏற்பாடு செய்த சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் இத்துறை தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த அமர்வை மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி. தர்ஷனா ஜர்தோஷ் தொடங்கி வைத்தார். அவர் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தையும், மதிப்பு சங்கிலியில் அனைத்து பிரிவுகளிலும் வளர்ச்சியை மேம்படுத்துவதில் கூட்டாக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சி துறை தொடர்பான முக்கியமான பிரச்சினைகளில் கூட்டாக விவாதித்து தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கான ஒரு தளமாகும் என்று அவர் குறிப்பிட்டார். ஜவுளி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து அலுவலகங்களிடையே சிறந்த புரிதலையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்தவும் இது உதவும்.

நாடு முழுவதிலுமிருந்து ஜவுளி அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் கள அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் நாள் முழுவதும் சிந்தன் ஷிவிர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். ஏற்றுமதியை ஊக்குவித்தல், முதலீடு- கட்டமைப்பு அளவு மற்றும் அளவீடு; நிலைத்தன்மை; இயற்கையிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட கண்ணாடியிழை மற்றும் சேவை வழங்கலை மேம்படுத்துதல் ஆகிய ஐந்து தலைப்புகளில் குழு சிந்தனை அமர்வுகள் நடைபெற்றன. அந்தந்த குழுக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் தீர்வுகளை வழங்கி விரிவான விளக்கக்காட்சிகள் வழங்கப்பட்டன. திறன் மேம்பாட்டு ஆணையத்தின் பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட குழுக் கட்டுமான அமர்வு பங்கேற்பாளர்களிடையே தகவல்தொடர்பு மற்றும் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்பையும் வழங்கியது.

வாழ்க்கை முறை பயிற்சியாளரும், ஊக்கமளிக்கும் பேச்சாளருமான திரு. கவுர் கோபால் தாஸ் மற்றும் காமா ஆயுர்வேதத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான திரு. விவேக் சாஹனி ஆகியோர் பங்கேற்பாளர்களிடையே உரையாற்றி தங்கள் கண்ணோட்டத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.

******

 (வெளியீட்டு எண்: 1940859)



(Release ID: 1940936) Visitor Counter : 107


Read this release in: Telugu , English , Urdu , Hindi