திருமதி நிவ்ருதி ராய் ஜூலை 12, 2023 அன்று இன்வெஸ்ட் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இணைந்துள்ளார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) இணைச் செயலாளர் திருமதி மன்மீத் கே நந்தாவிடம் இருந்து அவர் இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அவர் மார்ச் 2023-ல் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இந்த கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
தொழில்நுட்பத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளுக்காக மதிப்புமிக்க நாரி சக்தி புரஸ்கார் விருதைப் பெற்றவர் திருமதி ராய். திருமதி நிவ்ருதி ராய் இன்டெல் நிறுவனத்தில் சர்வதேச வணிக மற்றும் தொழில்நுட்பத் தலைவராக 29 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் இன்வெஸ்ட் இந்தியாவில் இணைந்துள்ளார். இந்தியாவில் இன்டெல் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளாக இன்டெல் இந்தியாவின் தலைவராக இருந்தார். இன்டெல் இந்தியாவில் தனது பதவிக்காலத்தில், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்பாடு, ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பு, மின்னணு உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் கொள்கை உருவாக்கம் ஆகியவற்றில் குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கணிசமான பங்களிப்பை வழங்கினார்.
பல்வேறு தொழில்துறை அமைப்புகள் மற்றும் அரசாங்க குழுக்களில் தலைமைக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த அவர், தொழிற்சங்கங்கள், வணிகத் தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களுடன் பணியாற்றுவதில் ஏராளமான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
புதிய இந்தியாவுக்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட இன்வெஸ்ட் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, தேசிய ஒற்றைச் சாளர அமைப்பு, திட்ட கண்காணிப்புக் குழு மற்றும் பிரதமரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க ஆலோசனைக் குழு உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கு அளித்த சிறந்த பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்த இன்வெஸ்ட் இந்தியா, தனியார் துறையின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகிறது. இது உயர் மட்ட வெளிப்படைத்தன்மை, நெறிமுறைகள் மற்றும் பெருநிறுவன ஆளுமை ஆகியவற்றை உள்ளடக்கியது.
இன்வெஸ்ட் இந்தியா நிர்வாகக் குழுவின் தலைவராக டிபிஐஐடியின் செயலாளர் திரு. ராஜேஷ் குமார் சிங் உள்ளார். அமைச்சரவை செயலகத்தின் செயலாளர் திரு. பி.கே. திரிபாதி, திருமதி ஆர்த்தி பட்நாகர், கூடுதல் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர், டிபிஐஐடி; வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு. முகமது நூர் ரஹ்மான் ஷேக்; மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கேடில்லா ஹெல்த்கேர் தலைவர் பங்கஜ் ஆர்.பட்டேல், அம்புஜா நியோடியா குழுமத் தலைவர் திரு.ஹர்ஷவர்தன் நியோடியா, அக்சென்சர் தலைவர் மற்றும் மூத்த நிர்வாக இயக்குநர் திருமதி ரேகா எம்.மேனன், நாஸ்காம் தலைவர் திருமதி தேப்ஜானி கோஷ்; மற்றும் சிஐஐ இயக்குநர் ஜெனரல் திரு சந்திரஜித் பானர்ஜி ஆகியோர் வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆவர்.
***
(Release ID 1940772)
SM/CR/KRS