கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச கடல்சார் இந்திய உச்சிமாநாடு 2023-ன் முன்னோட்டத்தை வெளியிட்டார்

Posted On: 18 JUL 2023 3:33PM by PIB Chennai

2023-ம் ஆண்டுக்கான சர்வதேச கடல்சார் இந்திய உச்சி மாநாட்டின் முன்னோட்டத்தை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை இணையமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், மும்பையில் இன்று தொடங்கி வைத்தார். வணிகத்தை எளிதாக்குவதையும், அறிவு மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல் போன்றவற்றை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த மாநாட்டுக்கான முன்னோட்டத்தை வெளியிட்டு உரையாற்றிய திரு. சோனோவால், இந்தியாவின் பொருளாதாரத்தில் கடல்சார் துறையின்  பங்கை விளக்கினார். அரசின் கொள்கைகள் காரணமாக இந்தியாவின் கடல்சார் துறை வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார். பிரதமர் திரு.நரேந்திர மோடியின் இலக்கான 2047-ம் ஆண்டுக்குள் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய இந்தியாவின் கடல்சார் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

சர்வதேச கடல்சார் இந்திய உச்சிமாநாடு 2023:

இந்நிகழ்வு இந்தியாவின் கடல்சார் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்கும், சவால்களை அறியவும், முதலீடுகளை ஈர்க்கவும்,  தொழில்துறையின் முக்கிய நபர்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகும். இந்நிகழ்வு 2023 அக்டோபர் 17-19-ம் தேதி வரை, புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடல்சார் இந்திய உச்சி மாநாடு 2023 பற்றிய முழு விவரங்களுக்கு, www.maritimeindiasummit.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கவும்.

----

SM/CR/KRS

 
 
 
 



(Release ID: 1940573) Visitor Counter : 274