வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏற்றுமதியை அதிகரிக்க வரியில்லா இறக்குமதியை அனுமதிக்கும் வகையில் மேம்பட்ட அங்கீகரித்தல் திட்டத்தை செயல்படுத்தும் டிஜிஎஃப்டி
प्रविष्टि तिथि:
17 JUL 2023 3:20PM by PIB Chennai
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையின் கீழ் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம் மேம்பட்ட அங்கீகாரத் திட்டத்தை செயல்படுத்துகிறது. இது ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக வரியில்லா இறக்குமதியை அனுமதிக்கிறது. இதற்கான தகுதியான பொருட்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு துறை சார்ந்த குழுக்களால் தீர்மானிக்கப்படுகிறது.
டிஜிஎஃப்டி இணையதளத்தில் உள்ள தரவுத்தளமானது, ஏற்றுமதி அல்லது இறக்குமதிக்கான பொருட்களின் அவற்றின் பெயர், பண்புகள், ஐடிசி குறியீடுகள் போன்றவற்றைப் பயன்படுத்தித்தேட பயனர்களை அனுமதிக்கிறது. ஏற்றுமதியாளர்களும், பொதுமக்களும் டிஜிஎஃப்டி இணையதளத்தில் சேவைகள் --> மேம்பட்ட அங்கீகாரம்/டிஎஃப்ஐஏ --> தற்காலிக விதிமுறைகளின் கீழ் இந்தத் தரவுகளைப் பார்வையிடலாம். இது பயனர்கள் நெறிமுறைக் குழுவை மீண்டும் அணுகாமல் முன்கூட்டியே அங்கீகாரத்தைப் பெற பயனர்களுக்கு அனுமதி அளிக்கிறது.
இந்த நடவடிக்கையானது முன்கூட்டியே அங்கீகாரம் பெறும் நடைமுறையை எளிதாக்குகிறது. இதன் விளைவாக ஏற்றுமதியாளர்களுக்கு வணிகத்தை எளிதாக்குவதோடு, அவர்களின் சுமையையும் குறைகிறது.
----
AP/BR/KPG
(रिलीज़ आईडी: 1940205)
आगंतुक पटल : 313