சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் இன்று உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

Posted On: 16 JUL 2023 6:20PM by PIB Chennai

புது தில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் (தில்லி உயிரியல் பூங்கா) இன்று (16.07.2023) உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் உள்ள பாம்புகளின் வகைகள், பாம்புகள் தொடர்பான தவறான தகவல்கள், நமது சுற்றுச்சூழல் அமைப்பில் பாம்புகளின் முக்கியத்துவம் போன்றவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பாம்புகளைப் பாதுகாக்கும் நோக்கில் தில்லி விலங்கியல் பூங்காவில் இந்த தினம்  கொண்டாடப்பட்டது.


இந்தப் பூங்காவில் உள்ள பாம்புகள் இல்லத்தில் சுமார் 350 பார்வையாளர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  பாம்புகள் குறித்தும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கமான மிஷன் லைஃப் பற்றியும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.  இந்த நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பாம்புகள் குறித்து அறிந்து கொண்டனர்.  தற்போது புதுதில்லியில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவில் 7 வகைகளில் 31 பாம்புகள் உள்ளன.

*********   

AP/PLM/KRS

 


(Release ID: 1940013) Visitor Counter : 128


Read this release in: English , Urdu , Hindi , Telugu