வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
திட்டமிட்ட நகர்ப்புற சீர்திருத்தங்கள் மூலம் நமது நகரங்கள் முதலீடுகளுக்கான கவர்ச்சிகரமான இடங்களாக மாறுகின்றன" - திரு.ஹர்தீப் எஸ். பூரி
இடுகை இடப்பட்ட நாள்:
13 JUL 2023 3:20PM by PIB Chennai
நகர்ப்புற மேம்பாட்டிற்கான சிறந்த தளமாக 'மறுசீரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் மிஷன்’ செயல்படுவதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு.ஹர்தீப் எஸ். பூரி பாராட்டு தெரிவித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து பேசிய அமைச்சர் ஹர்தீப் எஸ். புரி, நீர் மற்றும் சுகாதாரத்தை அனைவருக்கும் எளிதாக வழங்குவதன் மூலமும், நிலையான போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலமும், மலிவு விலையில் வீடுகளை உறுதி செய்வதன் மூலமும், நமது நகரங்களின் வாழ்க்கைத் தரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
தேசிய நகர்ப்புற திட்டமிடல் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றிய அவர், நகர்ப்புற திட்டமிடலில் சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் நமது நகரங்கள் முதலீட்டுக்கான கவர்ச்சிகரமான இடமாக மாறுவதாகவும் தெரிவித்தார்.
இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் மொத்தம் 24 விளக்கக்காட்சிகள் இடம்பெறும். நகர்ப்புற திட்டமிடல் துறையின் முன்னணி நிபுணர்கள் மூலம், போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி, உள்ளூர் சார்ந்த திட்டங்கள், குறைந்த விலையில் வீட்டுவசதி, சுற்றுச்சூழலோடு இணைந்த வளர்ச்சி போன்ற பல்வேறு தலைப்புகளில் 4 தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறவுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1939185
***
(வெளியீட்டு அடையாள எண்: 1939284)
வருகையாளர் எண்ணிக்கை : 155