பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புட்டபர்த்தியில் ஜூலை 4-ஆம் தேதி சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்

प्रविष्टि तिथि: 03 JUL 2023 6:29PM by PIB Chennai

ஆந்திர பிரதேச மாநிலத்தின் புட்டபர்த்தியில் ஜூலை 4-ஆம் தேதி சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை காலை 10.30 மணி அளவில் பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைக்கவுள்ளார். உலகம் முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர் மற்றும் பக்தர்கள் திறப்பு விழாவில் கலந்து கொள்வார்கள்.

ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் சாய் ஹீரா சர்வதேச மாநாட்டு மையத்தை நிறுவியுள்ளது. பிரசாந்தி நிலையம் என்பது ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பிரதான ஆசிரமம் ஆகும். கொடையாளர் திரு ரியூகோ ஹீராவின் நன்கொடையில் அமைக்கப்பட்டுள்ள மாநாட்டு மையம், கலாச்சார பரிமாற்றம், ஆன்மீக மற்றும் உலகளாவிய இணக்கத்தை ஊக்குவிக்கும் தொலைநோக்குப் பார்வைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். பலதரப்பட்ட மக்கள் ஒன்று சேர்ந்து, இணைந்து, ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் போதனைகளை ஆராய்வதற்கு சிறந்த சூழலை இந்த மையம் வழங்கும். இதன் உலகத்தரம் வாய்ந்த வசதிகளும், உள்கட்டமைப்பும் கருத்தரங்கங்கள், மாநாடுகள், கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்கள் போன்றவற்றிற்கு ஏதுவாக இருக்கும். பிரம்மாண்டமான வளாகத்தில் தியான அரங்கங்கள், கண்களுக்கு குளிர்ச்சியான தோட்டங்கள் மற்றும் தங்குவதற்கு ஏற்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கும்.

                               ------

PS/BR/KPG


(रिलीज़ आईडी: 1938889) आगंतुक पटल : 153
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam