பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
2023 ஜூன் மாதத்திற்கான மையப்படுத்தப்பட்ட மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறைதீர்ப்பு துறை வெளியிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் குறித்த 11-வது அறிக்கை வெளியீடு
Posted On:
11 JUL 2023 6:18PM by PIB Chennai
மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறை தீர்ப்பு துறை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் பற்றிய மையப்படுத்தப்பட்ட பொதுக் குறைகள் தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பால் வெளியிடப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசு பற்றிய 11வது அறிக்கையாகும்.
2023 ஜூன் மாதத்தில், மொத்தம் 62,929 குறைகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களால் நிவர்த்தி செய்யப்பட்டன. இதன் பொருள் மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகள் நிலுவையில் இருந்த புகார்களை 1,88,275 ஆகக் குறைத்துள்ளது என்பதாகும்.
மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறை தீர்ப்பு துறை கடந்த மே மாதம் முதல், செயல்திறனின் அடிப்படையில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்தும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. தற்சமயம், அது 4 வகைகளில் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை தரவரிசைப்படுத்துகிறது. அதாவது வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், மேலும் மாநிலங்களுக்கான இரண்டு பிரிவுகள் குறைகளின் பெறுதலின் அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
01.01.2023 முதல் 30.06.2023 வரையிலான இரண்டு பரிமாணங்களில் (தரம் மற்றும் சரியான நேரத்தில் குறைகளை நிவர்த்தி செய்தல்) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் குறைகளைத் தீர்ப்பதில், சிக்கிம் 66.70% என்ற சதவீதத்தில் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அசாம் (%7.45%) உள்ளது. மூன்றாவது இடம் அருணாச்சலப் பிரதேசம்( 52.30%).
யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவு ( 70.41%), அந்தமான் நிக்கோபார் (64.55%), லடாக் (52.25%) ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.
17,500 க்கும் அதிகமான மனுக்கள் பெற்றதில், உத்தரப் பிரதேசம் 63.90% மனுக்களுக்கு தீர்வு கண்டு முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடம் ஜார்க்கண்ட் (48.95%), மூன்றாவது இடம் மத்தியப் பிரதேசம் ($3.53%).
17,500 மனுக்களுக்கும் கீழே பெற்று தீர்வு கண்ட பட்டியலில், தெலங்கானா முதலிடம் பிடித்துள்ளது. 74.44% மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் (57.50 %), கேரளா (52.16%) ஆகிய மாநிலங்கள் அடுத்த இடத்தில் உள்ளன.
இந்த அறிக்கை மத்திய நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது குறை தீர்ப்பு துறையின் www.darpg.gov.in என்ற இணையதளத்தில் கிடைக்கிறது.
***
TV/ PKV /KRS
(Release ID: 1938801)
Visitor Counter : 174