நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

7.06% GS 2028, 7.26% GS 2033, 7.30% GS 2053 ஆகியவற்றின் விற்பனைக்கான ஏலம் (மறு வெளியீடு)

Posted On: 10 JUL 2023 6:58PM by PIB Chennai

மத்திய அரசு ‘7.06% GS 2028-ன் அடிப்படை ஏலத்தொகையாக ரூ.8,000 கோடியும், 7.26% GS 2033-ன் அடிப்படை ஏலத்தொகையாக ரூ.14,000 கோடியும், 7.30% GS 2053-ன் அடிப்படை ஏலத்தொகையாக ரூ.11,000 கோடியும் நிர்ணயித்து விற்பனைக்கு அறிவித்துள்ளது. 
ஏலத்திற்கு போட்டி மற்றும் போட்டியற்ற முறையில் மின்னணு வடிவத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் கோர் பேங்கிங் சொல்யூஷன் (இ-குபேர்) அமைப்பில் 2023 ஜூலை 14-ம் தேதியன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். போட்டியற்ற ஏலங்கள் காலை 10:30 மணியிலிருந்து காலை 11:00 மணிக்குள்ளும், போட்டி ஏலங்கள் காலை 10:30 மணி முதல் காலை 11:30 மணி வரையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
ஏலத்தின் முடிவு 2023 ஜூலை 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற ஏலதாரர்கள் 2023 ஜூலை 17-க்குள் (திங்கட்கிழமை) பணம் செலுத்த வேண்டும்.

 (Release ID : 1938484)

SM/CR/KRS


(Release ID: 1938523) Visitor Counter : 193


Read this release in: Urdu , English , Marathi , Hindi