ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் உட்பட ஏசி இருக்கை இடவசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏசி சேர் கார் மற்றும் சொகுசு வகுப்புகளில் தள்ளுபடி திட்டத்தை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது: அடிப்படை கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும்

Posted On: 08 JUL 2023 1:51PM by PIB Chennai

மக்களுக்கு ரயில்களின் பயன்பாட்டை மேம்படுத்தும் நோக்கில், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, குளிர்சாதன வசதி கொண்ட ரயில்களில் தள்ளுபடிக் கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்த மண்டல ரயில்வே நிர்வாகங்களுக்கு அதிகாரம் வழங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது:

 

தள்ளுபடிக் கட்டணத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

 

            அனுபூதி மற்றும் விஸ்டாடோம் பெட்டிகள் உட்பட குளிர்சாதன இருக்கை வசதி கொண்ட அனைத்து ரயில்களின் ஏசி சேர் கார் மற்றும் உயர் பிரிவு சொகுசு வகுப்புகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.

 

            இதில் அடிப்படை கட்டணத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். முன்பதிவு கட்டணம், சூப்பர் பாஸ்ட் சர்சார்ஜ், ஜி.எஸ்.டி., போன்ற பிற கட்டணங்கள் தனித்தனியாக விதிக்கப்படும். பதிவுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட அல்லது அனைத்து வகுப்புகளிலும் தள்ளுபடி வழங்கப்படலாம்.

 

            இந்த தள்ளுபடி உடனடியாக அமலுக்கு வரும். இருப்பினும், ஏற்கனவே முன்பதிவு செய்த பயணிகளுக்கு கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.

 

            இத்தகைய தள்ளுபடி திட்டம், ரயில் புறப்படும் நிலையத்துடன் தொடர்புடைய மண்டலங்களின் முதன்மை தலைமை வர்த்தக மேலாளர்களால் (பி.சி.சி.எம்.) தீர்மானிக்கப்பட்டு குறிப்பிட்ட காலத்திற்கு செயல்படுத்தப்படும்.

 

 

            மறுஆய்வு செய்யப்பட்டு பதிவின்  அடிப்படையில், தள்ளுபடி மாற்றியமைக்கப்படலாம் அல்லது நீட்டிக்கப்படலாம்  அல்லது திரும்பப் பெறப்படலாம்.

 

            தள்ளுபடித் திட்டத்தை திரும்பப் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டால், அது உடனடியாக செயல்படுத்தப்படலாம். இருப்பினும், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளிடமிருந்து கட்டண வித்தியாசம் வசூலிக்கப்பட மாட்டாது.

 

            விடுமுறை / பண்டிகை சிறப்பு ரயில்களாக அறிமுகப்படுத்தப்படும் சிறப்பு ரயில்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது.

***

AD/PLM/KRS

 


(Release ID: 1938232) Visitor Counter : 143


Read this release in: English , Urdu , Hindi , Marathi , Odia