பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பாரத் ஓய்வூதியர் சமாஜ் உறுப்பினர்களுடன் ஓய்வூதிய நலத்துறை செயலாளர் கலந்துரையாடல்
प्रविष्टि तिथि:
08 JUL 2023 3:45PM by PIB Chennai
ஓய்வூதியம் பெறுவோர் 'எளிதாக வாழ்வதை' மேம்படுத்தும் நோக்கில் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை, பல முயற்சிகளை எடுத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோருக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றை ஆன்லைன் முறையில் நடத்தி வருகிறது. தகவல்களை வழங்குவதற்கும், ஓய்வூதியம் பெறுவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களால் அனுப்பப்படும் பரிந்துரைகள் குறித்தும் ஆய்வு செய்து வருகிறது. ஓய்வூதியர்களின் இணையதளத்தில் நாடு முழுவதும் 50 ஓய்வூதியர் சங்கங்கள் பதிவு செய்துள்ளன.
பதிவுசெய்யப்பட்ட ஓய்வூதியதாரர்கள் சங்கமான பாரத் ஓய்வூதியர் சமாஜுடன் இது போன்ற ஒரு கூட்டம் நடைபெற்றது, ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை செயலாளர் திரு வி ஸ்ரீனிவாஸ், கூடுதல் செயலாளர் திரு சஞ்சீவ் நரேன் மாத்தூர் ஆகியோர் இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு, நாடு தழுவிய ஓய்வூதிய அதாலத்கள், குறைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பது உள்ளிட்ட ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு கொள்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
***
SM/PKV/KRS
(रिलीज़ आईडी: 1938226)
आगंतुक पटल : 277