மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2021-22 ஆம் ஆண்டிற்கான மாநிலங்களின் செயல்திறன் தரக் குறியீடு 2.0 அறிக்கையை வெளியிட்ட மத்திய கல்வி அமைச்சகம்
Posted On:
07 JUL 2023 4:49PM by PIB Chennai
இந்தியக் கல்வி அமைப்பானது 14.9 லட்சம் பள்ளிகள், 95 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார பின்னணியைக் கொண்ட சுமார் 26.5 கோடி மாணவர்களைக் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அமைப்பாகும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பள்ளிக் கல்வித்துறை செயல்திறனை மதிப்பிட மத்திய கல்வி அமைச்சகம் பல்வேறு குறியீடுகளைக் கணக்கில் கொண்டு செயல்திறன் தரக் குறியீட்டை(PGI) வடிவமைத்தது.
முதன்முதலில் 2017-18-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட இக்குறியீடு, 2020-21-ம் ஆண்டு வரை தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால், இதிலுள்ள பல குறியீடுகள் தேவையற்றதாகிவிட்டதால்,
தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைந்து மத்திய கல்வி அமைச்சகம் இக்குறியீடுகளை மாற்றியமைத்துள்ளது. இதற்கு செயல்திறன் தரக் குறியீடு 2.0 (PGI 2.0) என மறுபெயரிடப்பட்டது.
இந்தக் குறியீடு, 73 காரணிகளைக் கொண்டு மொத்தம் ஆயிரம் புள்ளிகளுக்கு மதிப்பிடப்படுகிறது. 2021-22-ம் ஆண்டுக்கான செயல்திறன் தரக் குறியீடு 2.0 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை பத்து வகைகளாக தர வரிசைப்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 1000 புள்ளிகளில் 940 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாநிலங்கள், அதிக செயல்திறன் கொண்டதாகவும், 460 புள்ளிகள் வரை பெற்ற மாநிலங்கள் குறைந்த செயல்திறன் கொண்டவைகளாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கிய பள்ளிக்கல்வியை உக்குவிப்பதோடு, அனைத்து மட்டத்திலும் வலுவான கல்வி முறையை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
2021-22-ம் ஆண்டுக்கான PGI 2.0 அறிக்கையைக் காண : https://www.education.gov.in/statistics-new?shs_term_node_tid_depth=391&Apply=Apply
(Release ID: 1937945)
***
SM/CR/KRS
(Release ID: 1938055)
Visitor Counter : 174