சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
2018 ஜூலை முதல் 2023 ஜூலை வரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பல்வேறு நடைமுறைகளை எளிதாக்கி புதுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது
Posted On:
06 JUL 2023 4:16PM by PIB Chennai
06.07.2018 அன்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவராக பொறுப்பேற்ற நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் இன்றுடன் தனது 5 ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தார். இந்த அ5 5 வருட காலத்தில் நீதியரசர் கோயல் சுற்றுச்சூழல் குறித்த நீதியை நிலைநாட்ட பல புதுமையான நடைமுறைகளைக் கொண்டு வந்தார்.
அவற்றில் சில பின்வருமாறு:
1) கொரோனாவுக்கு முன்பாகவே விசாரணைகளை விரைவாக முடிக்க வீடியோ கான்பரன்சிங் முறையை அறிமுகப்படுத்தியது. இது நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை எளிதாக அணுக அனுமதித்தது.
2) ஐந்தாண்டுகளுக்கு மேற்பட்ட மற்றும் சிக்கலான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வை ஏற்படுத்தியதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க உதவியது.
3) சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் ஏற்படும் விபத்துகளின் போது இழப்பீடு மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்புக்காக தாமாக முன்வந்து விசாரித்தது எளிய மக்கள் விரைவாக நிவாரணம் பெற உதவியது.
4) தொழில்நுட்பம், நிதிநிலை போன்ற எந்தஒரு தடையும் இன்றி கடிதம் மூலமும் அணுகும் வகையில் சாதாரண மக்களுக்காகவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கதவுகள் திறக்கப்பட்டன.
5) உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு புத்துயிர் அளிப்பது போன்ற சில முக்கிய பிரச்சினைகளையும் தீர்ப்பாயம் கண்காணித்து வருகிறது.
6) கழிவு மேலாண்மையில் உள்ள இடைவெளிகளை நிவர்த்தி செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் மூன்று முறை உரையாடியதோடு, திரவ மற்றும் திடக்கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றுவது தொடர்பான வழிகாட்டுதல்கள் நிறைவேற்றப்பட்டன.
தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம், 2010-ன் கீழ், மத்திய அரசு தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நிறுவியது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனப் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான வழக்குகளை விரைவான கையாள்வதே இதன் முக்கிய நோக்கமாகும். தொடக்கத்தில் இருந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் காற்று மாசுபாடு, ஒலி மாசுபாடு, நீர் மாசுபாடு, கழிவுகளை அகற்றுதல் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான வழக்குகளை எடுத்து வருகிறது.
***
AP/CR/RJ
(Release ID: 1937799)
Visitor Counter : 346