சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா தனித்துவமான பல்லுயிர் பாதுகாப்பு மாதிரியை வடிவமைத்துள்ளதாக திரு.பூபேந்தர் யாதவ் பெருமிதம்
Posted On:
06 JUL 2023 1:59PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. பூபேந்தர் யாதவ், பிரதமர் திரு.நரேந்திர மோடியின் அணுகுமுறை மூலம் இந்தியா தனித்துவமான பல்லுயிர் பாதுகாப்பு மாதிரியை வகுத்துள்ளதாகக் கூறினார்.
குஜராத்தின் துவாரகா பகுதியிலுள்ள ருக்மிணி கோயிலுக்கு அருகில் நடைபெற்ற ஹரியாலி உற்சவம் எனப்படும் மரத் திருவிழா நிகழ்ச்சியில் இன்று உரையாற்றிய திரு.பூபேந்திர யாதவ், சுற்றுச்சூழலுக்கும் அதனை சார்ந்திருக்கும் உயிரினங்களுக்கும் இடையே சமநிலையை காக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
உணவுச் சங்கிலியைப் பாதுகாப்பதன் மூலமும், விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுப்பதன் மூலமும், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் வலியுறுத்தினார். மத்திய அரசால் தொடங்கப்பட்ட ப்ராஜெக்ட் டால்பின் மற்றும் ப்ராஜெக்ட் லயன் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். கடற் பாதுகாப்பு, சதுப்புநிலங்கள் மற்றும் டால்பின்களின் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதற்காக குஜராத் கூடுதல் பணிகளைச் செய்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்த அவர், அழிந்து வரும் சதுப்புநிலப் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். இந்த விஷயத்தில் அரசும், தனியாரும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த அவர், இதில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டுமென அழைப்பு விடுத்தார்.
***
AP/CR/RJ
(Release ID: 1937762)
Visitor Counter : 171