குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

கோன்ட்வானா பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Posted On: 05 JUL 2023 2:10PM by PIB Chennai

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலில் உள்ள கோன்ட்வானா பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (ஜூலை 05,2023) பங்கேற்று உரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், எந்த ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் கல்வி முக்கிய பங்காற்றுவதாக கூறினார்.  அனைத்தையும் உள்ளடக்கிய,  குறைந்த கட்டணத்தில், மதிப்புமிக்க கல்வியை வழங்குவதில் கோன்ட்வானா பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகளை அறிந்து தாம் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். இப்பல்கலைக்கழகம் அறிவு, பகுப்பாய்வு அணுகுமுறை, தொழில்திறன், ஒழுக்கம் ஆகியவற்றின் வாயிலாக மாணவர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதாக கூறினார். நீடித்த வாழ்வாதாரத்திற்காக சமத்துவமிக்க கல்விச்சூழல், பன்முகத்துறை ஆராய்ச்சியை ஊக்குவித்தல், கல்வித்திட்டம் ஆகியவற்றை கட்டமைப்பதில் பல்கலைக்கழகம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார். இதுபோன்ற கல்விக்கான முன்னெடுப்புகள், பிராந்திய மற்றும் நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய  மாணவர்களை தயார் செய்யும் என்று கூறினார். கல்வி வாயிலாக பழங்குடியின சமுதாயம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை அளிப்பதற்காக கோன்ட்வானா பல்கலைக்கழகத்திற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டார்.

இப்பிராந்தியத்தின் காடுகளின் வளம், கனிம வளங்களின் வளர்ச்சி  ஆகியவற்றுடன் உள்ளூர் பழங்குடியின சமுதாயத்தினரின் கலை மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கோன்ட்வானா பல்கலைக்கழகத்தின் முயற்சியால் தாம் மகிழ்ச்சி அடைவதாக குடியரசுத் தலைவர் தெரிவித்தார். வன மேலாண்மை, மூங்கில் கைவினைக்கலை, டேலி கணக்குகள் போன்ற படிப்புகள் மூலம் அனுபவ கற்றலை ஊக்கப்படுத்தும் பல்கலைக்கழகத்தை அவர் பாராட்டினார். உள்ளூர் விவகாரம் தொடர்பான ஆராய்ச்சி குறித்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்தியதற்காகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

***

AD/IR/AG/KRS


(Release ID: 1937643) Visitor Counter : 149