மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

பெங்களூருவில், ஐடி வன்பொருளுக்கான பிஎல்ஐ 2.0 குறித்த டிஜிட்டல் இந்தியா உரையாடல் அமர்வில் மத்திய இணை அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் நாளை உரையாற்றுகிறார்

Posted On: 05 JUL 2023 4:45PM by PIB Chennai

தகவல் தொழில்நுட்ப (ஐடி) வன்பொருளுக்காக  அண்மையில் திருத்தப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை  திட்டம் (பிஎல்ஐ) குறித்து பெங்களூருவில் நாளை நடைபெறும் டிஜிட்டல் இந்தியா உரையாடல் அமர்வில்  மத்திய திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் மற்றும் மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர் உரையாற்றுகிறார்.

இக்கூட்டத்தில் நிபுணர்கள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் ஸ்டார்ட்அப்களின் பிரதிநிதிகள் உட்பட தொழில்நுட்ப சூழல் அமைப்பின் பங்குதாரர்கள் கலந்துகொள்வார்கள். மேம்படுத்தப்பட்ட செயலிகள், அறிவுசார் சொத்துக்கள்  மற்றும் உட்பொதிந்த அமைப்புகளின் வளர்ச்சியைத் தூண்டுவதில் இக்கூட்டம் கவனம் செலுத்தும்.  இந்தக் கலந்தாலோசனைகள் சட்டம் மற்றும் கொள்கை உருவாக்கத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடியின் அணுகுமுறைக்கு இணங்க இருக்கும். காலையில் பெங்களூரு வரும் அமைச்சர், செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வார், அதைத் தொடர்ந்து கலந்தாலோசனை நடத்துவார்.

நிதிச் சலுகைகளை வழங்குவதன் மூலம், தகவல் தொழில்நுட்ப வன்பொருள் கூறுகள் மற்றும் இணைப்புக்கான துணைக் கருவிகளின் உள்ளூர்மயமாக்கலை ஊக்குவிக்க அரசு முயற்சி செய்கிறது. இந்தத் திட்டம் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள், ஆல் இன் ஒன் பிசிக்கள், சர்வர்கள் மற்றும் அல்ட்ரா ஸ்மால் ஃபார்ம் பேக்டர் சாதனங்களை உள்ளடக்கியது. அவ்வாறு செய்வதன் மூலம், இந்தியாவின் உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்திச்சூழல் ஊக்குவிக்கப்படுவதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் ஐடி வன்பொருள் துறையில் இந்திய சாம்பியன்களை உருவாக்குகிறது.

மதிப்புத் தொடரில்  பெரிய முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் பிரபலப்படுத்தவும்  2021-ல் முதன்முதலில் அனுமதிக்கப்பட்ட திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை  இரட்டிப்பாக்கி.ரூ. 17,000 கோடி ஒதுக்கீட்டுடன் ஐடி வன்பொருளுக்கான பிஎல்ஐ 2.0 திட்டத்திற்கு மே மாதத்தில் அரசு  அனுமதி அளித்தது.

 இந்தத் திட்டம் ரூ. 3.35 லட்சம் கோடி மொத்த உற்பத்திக்கு வழிவகுக்கும் என்றும், மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில்  ரூ. 2,430 கோடி கூடுதல் முதலீட்டைக் கொண்டுவரும் என்றும் 75,000 நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

*****

 

(Release ID: 1937529)

 

SM/SMB/KRS

 



(Release ID: 1937620) Visitor Counter : 116