பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த மண்டல மாநாட்டை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தொடங்கி வைத்தார்

Posted On: 02 JUL 2023 6:33PM by PIB Chennai

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் குறித்த ஒரு நாள் மண்டல மாநாடு  புதுதில்லி விக்யான் பவனில் இன்று நடைபெற்றது. இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய ஒன்பது மாநிலங்கள் மற்றும் டெல்லி, சண்டிகர், ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இதில் பங்கேற்றன. இக்கருத்தரங்கில் குழந்தைகள் நலக் குழுக்கள், சிறார் நீதி வாரியங்கள், கிராம குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் என 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மாநாடு குழந்தைகளிங பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் நடத்தப்படுவதற்கான தொடக்கமாக அமைந்துள்ளது.

 

இந்த மாநாட்டை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி,  இணையமைச்சர் டாக்டர். முஞ்ச்பாரா மகேந்திரபாய் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். சிறார் நீதிச் சட்டம் மற்றும் விதிகளில் உள்ள திருத்தங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

2022 செப்டம்பரில் சிறார் நீதிச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த பிறகு தத்தெடுக்கும் முறைகளில் ஏற்பட்ட தாக்கம் குறித்து பெற்றோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் திருமதி ஸ்மிருதி இராணி, கடந்த 9 ஆண்டுகளில், காணாமல் போன சுமார் 3 லட்சம் குழந்தைகள், நாடு முழுவதும் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு மற்றும் காவல்துறையினரால் மீட்கப்பட்டு பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

***

AP/CR/DL



(Release ID: 1936956) Visitor Counter : 170