பாதுகாப்பு அமைச்சகம்
ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கி கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ரூ.2,275 கோடி மதிப்பில் ஒப்பந்தம்
प्रविष्टि तिथि:
30 JUN 2023 4:37PM by PIB Chennai
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 2023, ஜூன் 30-ந் தேதி ஐஎன்எஸ் ஷான்குஷ் நீர்மூழ்கிக் கப்பலின் மறுசீரமைப்பு சான்றிதழுக்காக மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் மும்பையில் ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.2,275 கோடி ஆகும்.
எஸ்எஸ்கே வகை நீர்மூழ்கிக் கப்பலான ஷான்குஷ், மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தில் மறுவடிவமைப்புக்கு உட்படுத்தப்படும். அவ்வாறு மறுவடிவமைப்பு செய்யப்படும் நீர்மூழ்கிக் கப்பல் 2026-ம் ஆண்டு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படவிருக்கிறது. இதைத் தொடர்ந்து இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் ஷான்குஷ் சேர்க்கப்படும்.
இந்தத் திட்டத்தில் 30 சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்தத் திட்டம் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கான முக்கிய படியாக கருதப்படும்.
***
AP/ES/AG/KRS
(रिलीज़ आईडी: 1936480)
आगंतुक पटल : 229