பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மொசாம்பிக்கின் பெய்ராவுக்கு சென்றது ஐஎன்எஸ் சுனய்னா

प्रविष्टि तिथि: 29 JUN 2023 6:46PM by PIB Chennai

கொச்சியில் உள்ள தெற்குக் கப்பற்படை தளத்தின்  ஐஎன்எஸ் சுனய்னா, ஜூன் 28 அன்று மொசாம்பிக்கின்  பெய்ரா துறைமுகத்திற்கு சென்றது. இந்தக் கப்பலை  ராணுவ இசைக்குழுவின் இசையுடன் மொசாம்பிக் கப்பற்படை வீரர்கள் வரவேற்றனர். கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு செயல்பாட்டை மேம்படுத்த, இரு கப்பற்படைகளும் தொழில்முறை பரிமாற்றங்கள், கப்பல் மாறி பார்வையிடுதல் மற்றும் விளையாட்டுகளில்  இருதரப்பினரும்  ஈடுபடும். இந்தியக் கப்பற்படையின் சமூகத் தொடர்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தக் கப்பல் மருத்துவ முகாமை நடத்தவுள்ளது. துறைமுக நிகழ்வு  முடிந்ததும், மொசாம்பிக் கப்பற்படையுடன் இணைந்து தனிச்சிறப்புப் பொருளாதார மண்டலக் கண்காணிப்புக்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

*****

 

SMB/KPG


(रिलीज़ आईडी: 1936280) आगंतुक पटल : 168
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu