எரிசக்தி அமைச்சகம்
ஆதார தேவை திட்டமிடுதல் கட்டமைப்புக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது
Posted On:
28 JUN 2023 6:37PM by PIB Chennai
இந்தியாவுக்கான வள ஆதார தேவை திட்டமிடுதல் கட்டமைப்புக்கு, மத்திய மின்சார ஆணையத்துடன் ஆலோசித்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த விதிமுறைகள், மின்சார (திருத்த) விதிகள் 2022-ல் 16-வது விதியின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான மின்சாரத்தை போதுமான அளவில் கிடைப்பதை இந்த விதிமுறைகள் உறுதிசெய்யும். மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மின் விநியோக நிறுவனங்கள் தேவையான வள ஆதாரத்தை குறைந்த விலையில் ஏற்கனவே கொள்முதல் செய்து இருப்புவைக்க இந்தக் கட்டமைப்பு வகை செய்கிறது.
எதிர்காலத்துக்கான மின்சாரத் தேவையை மதிப்பிடும் அறிவியல்பூர்வ அணுகுமுறையை உரியகாலத்தில் மேற்கொள்ள விதிமுறைகள் வகை செய்கிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்யும் கொள்முதல் திறனை அதிகரிக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கவும் இது வழிவகுக்கிறது.
இந்த விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு ஆர் கே சிங், நுகர்வோருக்கு உகந்த கட்டணத்தில் 24 மணிநேரமும் நம்பகத்தன்மைமிக்க மின்சார விநியோகத்தை அளிக்கும் மிகப்பெரிய சீர்திருத்தம் இது என கூறியுள்ளார். இதனால் மின்சார விநியோகப் பற்றாக்குறை எதிர்காலத்தில் தவிர்க்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இந்தக் கட்டமைப்பு உகந்த கட்டணத்தில் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வது, தூய்மையான நிலைத்த வருங்காலத்திற்கான மாற்றத்தை ஏற்படுத்துவது ஆகிய இரண்டு நோக்கங்களை உறுதி செய்கிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
***
AP/PKV/RJ/KRS
(Release ID: 1936057)
Visitor Counter : 234