நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிக ரீதியிலான நிலக்கரி சுரங்க ஏலத்துக்கு டெண்டர்களை நிலக்கரி அமைச்சகம் திறந்துள்ளது

प्रविष्टि तिथि: 28 JUN 2023 4:08PM by PIB Chennai

103 நிலக்கரி/பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி விற்பனைக்கான ஏல நடைமுறைகளை மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட ஆணையம் தொடங்கியுள்ளது.  அனைத்து நிலக்கரி சுரங்கங்களுக்கான தொழில்நுட்ப டெண்டர்களை சமர்ப்பிப்பதற்கு கடைசி தேதி ஜூன் 27 ஆகும்.  ஏல நடைமுறைகளின் ஒருபகுதியாக, ஆன்லைன் மற்றும் நேரில்  பெறப்பட்ட தொழில்நுட்ப டெண்டர் ஆவணங்கள் இன்று திறக்கப்பட்டன.  ஆன்லைன் டெண்டர்கள், ஏலதாரர்கள் முன்னிலையில் மின்னணு முறையில் திறக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேரில் சமர்ப்பிக்கப்பட்ட மூடி முத்திரையிடப்பட்ட டெண்டர் ஆவணங்கள் ஏலதாரர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டன.  ஏல திறப்பு நடைமுறைகள் அனைத்தும், ஏலதாரர்களுக்கு டிவி திரையில் ஒளிபரப்பப்பட்டடன.

மொத்தம் 35 டெண்டர்கள் (ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம்) இரண்டு தவணைகளாகப் பெறப்பட்டன.  டெண்டர்கள் பன்னோக்கு தொழில்நுட்ப மதிப்பீட்டு குழுவால் ஆய்வு செய்யப்படும். தகுதியான டெண்டர்கள் மின்னணு ஏலத்தில் பங்கேற்க தேர்வு செய்யப்படும்.  மின்னணு ஏலம் எம்எஸ்டிசி தளத்தில் விரைவில் நடத்தப்படும்.

***

AP/PKV/RJ/KRS


(रिलीज़ आईडी: 1936001) आगंतुक पटल : 142
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada