தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
சர்வதேச தொலைத்தொடர்பு யூனியனின் 6ஜி தொலைநோக்குக் கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது
Posted On:
28 JUN 2023 3:35PM by PIB Chennai
6ஜி எனப்படும் ஆறாம் தலைமுறை தொலைநோக்குக் கட்டமைப்புக்கு சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத்துறை மூலம் இந்த கட்டமைப்பை வடிவமைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்றியுள்ளது.
பாரத் 6ஜி விஷன் எனப்படும் இந்தியாவின் 6ஜி தொலைநோக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி கடந்த மார்ச் 23-ம் தேதி வெளியிட்டார். 2030-ம் ஆண்டுக்குள் 6ஜி தொழில்நுட்பத்தை வடிவமைத்து, உருவாக்கி செயல்படுத்துவதில் இந்தியா முன்னணி பங்களிப்பை செலுத்துவதற்கு இது வழிவகுக்கும்.
எளிதில் அணுகக்கூடியதாகவும், நீடித்திருக்கக் கூடியதாகவும், எங்கும் நிறைந்திருக்கக் கூடியதாகவும், பாரத் 6ஜி மிஷனை தொலைநோக்கு வடிவமைக்கப்படுகிறது. உலக நன்மைக்காக நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களையும், குறைந்த விலையில் தீர்வுகளையும் வழங்குவதில் முன்னணி நாடாக உள்ள இந்தியாவுக்கு அதன் சரியான பங்கை அளிப்பதை இந்த தொலைநோக்கு உறுதி செய்கிறது.
ஐடியு 6ஜி கட்டமைப்பு ஐநா உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் ஆரம்பத்திலிருந்தே இந்தியா முன்னணி பங்காற்றி வருகிறது.
***
AP/PKV/RJ/KRS
(Release ID: 1935999)
Visitor Counter : 187