நிலக்கரி அமைச்சகம்
இந்தியாவில் வர்த்தக நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நிதி
Posted On:
26 JUN 2023 6:09PM by PIB Chennai
நாட்டில் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதில் உதவுவது, பிரதமர் திரு நரேந்திர மோடியும் தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையில் செயல் ரீதியாக பங்கேற்பதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் வர்த்தக நிலக்கரிச் சுரங்கங்களுக்கு நிதியை மேம்படுத்தும் நோக்கில் புதுதில்லியில் நிலக்கரிச் சுரங்கத்தொழில் தொடர்புடையவர்கள், ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு செய்தது. இக்கூட்டத்திற்கு நிலக்கரி அமைச்சக கூடுதல் செயலாளர் திரு நாகராஜூ, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு பெற்றவர்கள், வங்கிகள், நிதிநிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசிய திரு எம் நாகராஜூ, உலகளாவிய தொழில்துறை குறித்தும், இந்தியாவில் உள்ள நிலக்கரிச் துறையின் கண்ணோட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். நிலக்கரிச் சுரங்கங்களுக்கு உடனடி நிதித்தேவைக்குறித்து அவர் குறிப்பிட்டார். இதுவரை 87 சுரங்கங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சில சுரங்கங்கள் மட்டுமே நிதி ஆதரவை வெற்றிகரமாக பெற்றுள்ளதாகவும் கூறினார். நிலக்கரித் துறைக்கு நிதி வழங்குமாறு வங்கிகள், நிதி நிறுவனங்களை அவர் வலியுறுத்தினார்.
***
AP/IR/RS/KRS
(Release ID: 1935462)
Visitor Counter : 123