தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
2023ஏப்ரல் மாதத்தில் ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் மொத்த உறுப்பினர்கள்எண்ணிக்கையில் 17.20 லட்சம் கூடியுள்ளது
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் உறுப்பினர்கள் எண்ணிக்கை 59.20 சதவீதம் அதிகரித்துள்ளது
Posted On:
20 JUN 2023 6:10PM by PIB Chennai
ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் தற்காலிக சம்பளப்பட்டியல் புள்ளி விவரம் 2023 ஜூன் 20 அன்று வெளியிடப்பட்டது. இதன்படி இந்த அமைப்பின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையில் 2023 ஏப்ரல் மாதத்தில் 17.20 லட்சம் கூடியுள்ளது.
இவர்களில் 8.4 லட்சம் புதிய உறுப்பினர்கள் முதன்முறையாக சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வந்துள்ளனர். புதிதாக சேர்ந்த உறுப்பினர்களில் 54.15 சதவீதம் பேர் 18-லிருந்து
25 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலோர் அமைப்பு சார்ந்த தொழில்துறையில் இணைந்திருப்பதோடு முதன்முறை வேலைவாய்ப்பை பெற்றவர்களாகவும் உள்ளனர்.
ஏதாவது ஒரு நிறுவனத்தில் பணியாற்றி அதிலிருந்து விலகி மீண்டும் பணியில் சேர்ந்து வருங்கால வைப்புநிதி அமைப்பில் சேர்ந்தவர்கள் எண்ணிக்கை 2023 மார்ச் மாதத்தில் 10.09 லட்சம் பேராக இருந்த நிலையில், ஏப்ரல் மாதத்தில் இந்த எண்ணிக்கை 12.50 லட்சம் பேராக அதிகரித்துள்ளது.
2023 ஏப்ரல் மாதத்தில் வருங்கால வைப்புநிதி அமைப்பில் சேர்ந்தவர்களில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 3.48 லட்சமாக இருந்தது. மார்ச் மாதத்தில் இது 2.57 லட்சமாக இருந்தது.
ஒட்டுமொத்த இந்தியாவின் சம்பளப்பட்டியல் பகுப்பாய்வின்படி மார்ச் மாதத்தை விட ஏப்ரல் மாதத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை பல மாநிலங்களில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 59.20 சதவீதத்துடன் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தில்லி ஆகியவை முதன்மையான 5 மாநிலங்களாக உள்ளன.
***
SM/SMB/RJ/KRS
(Release ID: 1933747)
Visitor Counter : 167