சுற்றுலா அமைச்சகம்

கோவாவில் ஜி20-ன் கீழ் 4 வது சுற்றுலா பணிக்குழு கூட்டத்தின் தொடக்க அமர்வு இன்று நடைபெற்றது

Posted On: 20 JUN 2023 3:30PM by PIB Chennai

கோவாவில் மத்திய சுற்றுலா அமைச்சகம் சார்பில் ஜி20 அமைப்பின் கீழ் 4-வது சுற்றுலா பணிக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது.

தொடக்க அமர்வில் மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்துக்கான துறை அமைச்சர் திரு.ஜி.கிஷன் ரெட்டி, சுற்றுலாத்துறை இணையமைச்சர்கள் திரு. அஜய் பட். திரு ஸ்ரீபாத் யெசோ நாயக், கோவா மாநில முதலமைச்சர் திரு பிரமோத் சாவந்த் ஆகியோர் உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கோவா மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ரோஹன் கவுண்டே கலந்து கொண்டார்.

தொடக்க அமர்வில் உரையாற்றிய மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. ஜி.கே.ரெட்டி, கடந்த சில மாதங்களில், ஜி 20 சுற்றுலா பணிக்குழு கூட்டங்கள் இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடத்தப்பட்டன, இதில் முதல் கூட்டம் குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச்சிலும், இரண்டாவது கூட்டம் மேற்கு வங்கத்தின் சிலிகுரியிலும், மூன்றாவது கூட்டம் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரிலும் நடைபெற்றது. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தலைவர்களுடன் பல்வேறு வகையான சுற்றுலா தயாரிப்புகள் குறித்த சிந்தனையைத் தூண்டும் மற்றும் நேர்மறையான விவாதங்கள் இதில் நடைபெற்றன.

நமது ஆன்மீக வலிமை மற்றும் நாட்டின் பல்வேறு இடங்களின் பன்முகத்தன்மையின் அழகு, மகத்துவம் மற்றும் செழுமையை அனுபவிக்காமல், ஒரு இந்திய பயணம் முழுமையடையாது என்றும் அவர் கூறினார். "பெண்களின் தெய்வீகத்தை வணங்கும் 50 க்கும் மேற்பட்ட சக்தி பீடங்கள் நம்மிடம் உள்ளன. இந்தியா சீக்கிய மதத்தின் பிறப்பிடம் ஆகும். அமிர்தசரஸில் உள்ள சீக்கிய பொற்கோயில், சகோதரத்துவம் மற்றும் சமத்துவத்தின் அடையாளமாகும் என்றார் அவர்.

"இந்தியா பௌத்தம் மற்றும் சமண மதங்களின் பிறப்பிடமாகும், மேலும் சுமார் 80% இந்து மக்களைக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 200 பெரிய பௌத்த மடாலயங்கள் அகிம்சையின் பௌத்த கொள்கைகளையும், இயற்கை வடிவங்களுடன் இணக்கமாக வாழும் சமண தத்துவத்தையும் நமக்கு நினைவூட்டுகின்றன.” என்று அவர் கூறினார்.

பிரதமரின் தலைமைத்துவம் குறித்து பேசிய அவர், "வளமான பாரம்பரியம் மற்றும் நாகரிக வலிமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான எங்கள் அரசாங்கம் 2014 முதல் சுற்றுலாவை ஊக்குவித்து வருகிறது, மேலும் அவர் உலகளாவிய அளவில் இந்திய சுற்றுலாவை அறிமுகப்படுத்தும் நமது சொந்த சுற்றுலா தூதர்" என்று கூறினார்.

  200 நாடுகள் மற்றும் பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்புகளை இந்தியா வழங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்தியாவில், விருந்தினரைத் தெய்வீகமாகக் கருதும் 'அதிதி தேவோ பவ' என்ற நமது பண்டைய தத்துவத்தின் உணர்வில், கொரோனாவுக்குப் பிறகு நமது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது என்றும், 2023 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 2022 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வருகைகளை விட 166% அதிகம் என்றும் திரு ஜி.கே.ரெட்டி மேலும் தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டில் இந்தியா அதன், உள்வரும் பயணத்தை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 ***

SM/PKV/AG/KRS



(Release ID: 1933680) Visitor Counter : 113