ஜல்சக்தி அமைச்சகம்
நீடித்த வளர்ச்சிக்காக ஆற்றுப்படுகைகள், நீர்த்தேக்க படிவுகளில் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த தேசிய பயிலரங்கு
प्रविष्टि तिथि:
19 JUN 2023 6:12PM by PIB Chennai
நீடித்த வளர்ச்சிக்காக ஆற்றுப்படுகைகள், நீர்த்தேக்க படிவுகளில் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்த தேசிய பயிலரங்கை புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர் ஆணையம் இன்று (19.06.2023) ஏற்பாடு செய்திருந்தது. இதனை நீர்வளத்துறைச் செயலாளர் திரு பங்கஜ் குமார் தொடங்கிவைத்தார். பல்வேறு அமைச்சகங்களின் 200-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.
நீர்த்தேக்கங்களில் உள்ள வண்டல் படிமங்களைக் கட்டுப்படுத்துவதற்கு குறுகிய மற்றும் நீண்டகாலத்திட்டங்களை தயார் செய்து படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று இக்கருத்தரங்கில் ஒப்புக்கொள்ளப்பட்டது.
***
SM/IR/KPG/KRS
(रिलीज़ आईडी: 1933510)
आगंतुक पटल : 156