சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்

மகளிர் 20' உச்சிமாநாடு: மகளிர் தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை, ஆளுமைக்கானத் தடைகளைத் தகர்த்தல்

மகளிர் அதிகாரமளித்தலின் வெற்றியைக் கொண்டாடுதல்

Posted On: 16 JUN 2023 6:18PM by PIB Chennai

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் மகளிர் 20' உச்சிமாநாட்டின் 2-ம் நாள் அமர்வு 2023, ஜூன் 16-ம் தேதி நடைபெற்றது. இதில் மகளிர் தலைமை வகிப்பதிலும், நிர்வகிக்கும் பொறுப்புகளை கையாள்வதிலும் உள்ளத் தடைகளைத் தகர்க்க ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்ற கருப்பொருளில் துவக்க அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வுக்கு ஐரோப்பிய படிப்புகளுக்கான மணிப்பால் மையத்தின் பேராசிரியர் டாக்டர் நீட்டா தலைமை வகித்தார்.

    

இதில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் திருமதி வானதி சீனிவாசன் சிறப்புரையாற்றினார். அப்போது, கொள்கை உருவாக்கம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் வாயிலாக மகளிரை அதிகமாரமிக்கவர்களாக மாற்றுவதில் தமக்குக் கிடைத்த அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார். இல்லத்தரசிகளுக்கும், அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இடையேயான தொடர்பை விளக்கிய அவர், இந்த வன்முறையைக் குறைப்பதில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் விளக்கினார்.  

    

இதைத் தொடர்ந்து 2-வது அமர்வில் வர்த்தகம் மற்றும் முதலீடு வாயிலாக பொருளாதாரம் அதிகாரமளித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் உள்கட்டமைப்பு மற்றும் சேவைப் பிரிவுகளில் முதலீடு செய்வது என்ற கருப்பொருளில்   3-வது அமர்வு நடைபெற்றது. இறுதி அமர்வில் பெண்கள் தங்களது பலத்தை, முன்னேற்றத்தை, தன்னிறைவைக் கொண்டாடுவது குறித்து விளக்கப்பட்டது. இறுதி அமர்வில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு தங்கம் தென்னரசு இறுதி அமர்வு உரையாற்றினார்.  

    

***

AP/ES/RJ/KRS



(Release ID: 1932967) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Telugu