அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

பிம்பெட்காவில் காலத்துக்கு முந்தைய விலங்கின் புதைப்படிம கண்டுபிடிப்பு தவறானது என இந்திய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்

Posted On: 16 JUN 2023 5:07PM by PIB Chennai

பிம்பெட்காவில் காலத்துக்கு முந்தைய விலங்கின் புதைப்படிமம், யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ள, மத்தியப் பிரதேசத்தின் பிம்பெட்கா குகைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுவதை இந்திய விஞ்ஞானிகள்  மறுத்துள்ளனர்.  இந்த புதைப்படிமம் 2021-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.  இது விலங்கின் புதைப்படிமம் அல்ல என்றும், விழுந்த தேனடையின் பிம்பம் என்றும் இந்திய விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

பூமியின் 100 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றில் ஆராயும் விந்தியன் சூப்பர் குரூப் என்னும் குழு பல கண்டுபிடிப்புகளை வெளியிட்டு பூமியின் உயிரினங்கள் எவ்வாறு தோன்றி, பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை விளக்கியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 550 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் விலங்குகளின் படிமங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது. இதுபோன்ற புதைப்படிமம் பிம்பெட்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறியிருந்தது. இதனை இந்திய விஞ்ஞானிகள் தற்போது மறுத்துள்ளனர்.

படிமம் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் இந்திய ஆராய்ச்சியாளர்கள் கள ஆய்வு நடத்தி இதனை நிரூபித்துள்ளனர்.

***

AP/PKV/AG/KRS



(Release ID: 1932951) Visitor Counter : 142


Read this release in: English , Urdu , Hindi