வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 60.29 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது

Posted On: 15 JUN 2023 5:12PM by PIB Chennai

2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி 60.29 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  இது 2022 மே மாதத்தைவிட 5.99 சதவீதம்  குறைவு என்பதைக் காட்டுகிறது.

2023 மே மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இற்குமதி 7.64 பில்லியன் அமெரிக்க டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.  இது 2022 மே மாதத்தைவிட 7.45 சதவீதம் குறைவு என்பதைக் காட்டுகிறது.

2023 மே மாதத்தில் வர்த்தகப் பொருள்களின் ஏற்றுமதி 30 முக்கியத் துறைகளில் 13-ல் கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆக்கப்பூர்வமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மின்னணுப் பொருட்கள் (73.96%), பருப்பு வகைகள் (67.96%), வாசனைத் திரவியங்கள் (49.84%), இரும்புத் தாது (48.26%), எண்ணெய் வித்துக்கள் (25.02%), பழங்கள் மற்றும் காய்கறிகள் (19.91%), அரிசி (14.27%), தேயிலை (8.81%), முந்திரி (2.81%), காபி (1.71%) ஆகியவை இவற்றில் அடங்கும்.

2023 மே  மாத காலத்தில் மின்னணுப் பொருட்களின் ஏற்றுமதி, 2022 மே மாதத்தின் 1.39 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதோடு ஒப்பிடுகையில், 73.96% அதிகரித்து 2.42 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

சேவைகள் துறைக்கான அண்மைக்கால புள்ளிவிவரங்கள்  இந்திய ரிசர்வ் வங்கியால் 2023 ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது. 2023 மே மாதத்திற்கான புள்ளிவிவரங்கள் ஒரு மதிப்பீடு மட்டுமே. இது இந்திய ரிசர்வ் வங்கியின் அடுத்த அடுத்த வெளியீடு அடிப்படையில் மாற்றியமைக்கப்படும்.

உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தக வளர்ச்சி மதிப்பீடு ஏற்கனவே ஒரு சதவீதம் என்பதிலிருந்து 1.7 சதவீதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

 

2022 ஏப்ரல் மே காலத்தில் ஒட்டுமொத்த வர்த்தகப் பற்றாக்குறை  20.56 பில்லியன் அமெரிக்க டாலர் என்பதோடு ஒப்பிடுகையில், 35.41 சதவீதம் குறைந்து 2023 ஏப்ரல் - மே காலத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 13.28 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932621

------ 

AD/SMB/KPG/GK

 



(Release ID: 1932684) Visitor Counter : 191


Read this release in: Kannada , English , Urdu , Hindi