சுற்றுலா அமைச்சகம்
கோவாவில் 2023 ஜூன் 19 முதல் 22 வரை நான்காவது ஜி20 சுற்றுலாப் பணிக்குழு மற்றும் சுற்றுலா அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது
प्रविष्टि तिथि:
14 JUN 2023 6:46PM by PIB Chennai
கோவாவில் 2023 ஜூன் 19 முதல் 22 வரை நான்காவது ஜி20 சுற்றுலாப் பணிக்குழு மற்றும் சுற்றுலா அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்திற்கு சுற்றுலா அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. புதுதில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை செயலாளர் திருமதி வி வித்யாவதி இதனைத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பசுமைச் சுற்றுலா, டிஜிட்டல் மயம், திறன் மேம்பாடு உள்ளிட்ட 5 அம்சங்கள் முக்கியத்துவம் பெறும் என்று அவர் கூறினார்.
நீடிக்கவல்ல வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்குரிய சாதனமாக சுற்றுலாவுக்கான கோவா திட்டம், ஜி20 சுற்றுலா அமைச்சர்களின் பிரகடனம் ஆகியவை முக்கிய இடம் பெறும் என்றும் இவை விரைவில், இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறினார். நீடிக்கவல்ல மற்றும் பொறுப்பான பயணத்தின் மாதிரியாக கப்பல் சுற்றுலாவை உருவாக்குவது என்பது இந்தக் கூட்டத்தின் துணை நிகழ்வாக அமையும் என்று அவர் தெரிவித்தார். உலக அளவில் கப்பல் சுற்றுலாவின் சவால்களும், வாய்ப்புகளும் குறித்த கருத்துரைகள் இடம் பெறும் என்று கூறிய அவர், கப்பல் சுற்றுலாவுக்கான குவி மையமாக இந்தியாவை மாற்றுவதில் கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932390
-----
AD/SMB/KPG/GK
(रिलीज़ आईडी: 1932426)
आगंतुक पटल : 213