மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
‘ஜி20 டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின்’ மூன்றாவது கூட்டம் 2023 ஜூன் 14 அன்று நிறைவடைந்தது
Posted On:
14 JUN 2023 5:55PM by PIB Chennai
‘ஜி20 டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின்’ மூன்றாவது கூட்டம் 2023 ஜூன் 14 அன்று புனேவில் நிறைவடைந்தது. உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாடு, உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்புக் கண்காட்சி ஆகியவை இந்த 3 நாள் கூட்டத்தில் முக்கிய அம்சங்களாக இருந்தன. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்திப்பு நடைபெற்றது.
ஜூன் 12, 13 தேதிகளில் நடைபெற்ற உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் 250-க்கும் அதிகமான பிரதிநிதிகள் நேரடியாக கலந்து கொண்டனர். இவர்களில் 50 நாடுகளைச் சேர்ந்த 150 பிரதிநிதிகளும் அடங்குவர். 200-க்கும் அதிகமானோர் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டனர். இந்தப் பணிக் குழுக் கூட்டத்தின் போது வெற்றிகரமான டிஜிட்டல் தேர்வுகள் அமலாக்கத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அமெரிக்கா, சியரா லியோன், சுரிநாம், ஆன்ட்டிகுவா, பர்புடா ஆகிய நாடுகளுடன் இந்தியா புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த பொதுவான டிஜிட்டல் கட்டமைப்பு உச்சிமாநாட்டில் உலகளாவிய 60 நிபுணர்கள் பங்கேற்று 10 முக்கியமான அமர்வுகளில் கருத்துப் பரிமாற்றம் செய்தனர். இந்த அமர்வுகளில் பதிவு செய்யப்பட்டவற்றை https://www.indiastack.global/global-dpi-summit/ என்ற இணையதளத்தில் காணலாம்.
ஜூன் 12 முதல் 14 வரை உலகளாவிய பொதுவான டிஜிட்டல் கட்டமைப்புக் கண்காட்சி நடைபெற்றது. டிஜிட்டல் அடையாளம், விரைவு பணப்பரிவர்த்தனை, டிஜிலாக்கர், மண்வள அட்டை, தேசிய இ-வேளாண் சந்தை, டிஜிட்டல் முறையில் மொழிமாற்றம் போன்ற 14 அனுபவத் தளங்களில் டிஜிட்டல் கட்டமைப்பின் வெற்றிகரமான அமலாக்கம் இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. புனே நகரைச் சேர்ந்த தொழில்முறையாளர்கள், இளைஞர்கள், மூத்த குடிமக்கள், உள்பட ஏராளமானோர் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
டிஜிட்டல் பொருளாதாரப் பணிக்குழுவின் நான்காவது கூட்டம் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்களின் கூட்டத்தை 2023 ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூருவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932370
***
AD/SMB/KPG/GK
(Release ID: 1932417)
Visitor Counter : 264