எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முன்னணி நிறுவனங்கள் குறித்த போர்ப்ஸின் தி குளோபல் 2000 தரவரிசை பட்டியலில் என்டிபிசி நிறுவனம் 52 இடங்கள் முன்னேறி 433-வது இடத்தைப் பிடித்தது

Posted On: 14 JUN 2023 4:32PM by PIB Chennai

இந்தியாவின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி நிறுவனமான தேசிய அனல் மின் கழகம் (என்டிபிசி) முன்னணி நிறுவனங்கள் குறித்த போர்ப்ஸின் 2023 ஆம் ஆண்டுக்கான தி குளோபல் 2000 தரவரிசை பட்டியலில் என்டிபிசி நிறுவனம் 52 இடங்கள் முன்னேறி 433-வது இடத்தைப் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் பட்டியலில் 485-வது இடத்தைப் பிடித்திருந்த என்டிபிசி தற்போது ஓராண்டுக்குள் 52 இடங்கள் முன்னேறியுள்ளது. இதன் மூலம் என்டிபிசி சர்வதேச சந்தையில் ஒரு வலுவான இடத்தைப் பிடித்துள்ளது. நிறுவனத்தின் உறுதியான விரிவாக்கம், வலுவான நிதிநிலை, செயல்திறன்மிக்க அர்ப்பணிப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இந்த உயர்வு அமைந்துள்ளது.

தி குளோபல் 2000 பட்டியல், விற்பனை, லாபம். சொத்துக்கள். சந்தை மதிப்பு ஆகிய 4 முக்கிய அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு உலகின் முன்னணி நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. இந்திய நிறுவனங்களைப் பொறுத்த வரை, 2023 ஆம் ஆண்டு பட்டியலில் என்டிபிசி ஒரு இடம் முன்னேறி 10-வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் பெருநிறுவனப் பிரிவில் என்டிபிசி அந்தஸ்து மேலும் முன்னேறியுள்ளது.

 

***



 

AD/PKV/RR/GK


(Release ID: 1932381) Visitor Counter : 157


Read this release in: English , Urdu , Hindi , Marathi