பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2023, மே மாதத்திற்கான மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் மத்திய அமைச்சகங்கள், துறைகளின் 13-வது அறிக்கை வெளியிட்டுள்ளது
Posted On:
14 JUN 2023 12:46PM by PIB Chennai
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை 2023, மே மாதத்திற்கான மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் கண்காணிப்பு முறையில் மத்திய அமைச்சகங்கள், துறைகளின் 13-வது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2023, மே மாதத்தில் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மூலம் மொத்தம் 1,16,734 எண்ணிக்கை அளவிற்கு பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் குறைதீர்க்க வேண்டிய மனுக்கள் நிலுவையில் உள்ள எண்ணிக்கை 58,127-ஆக உள்ளது. இது மத்திய அமைச்சகங்கள், துறைகள் இதுவரை இல்லாத அளவாக மிக குறைவான எண்ணிக்கையாகும். 2023 ஜனவரி முதல் மே மாதம் வரை சராசரியாக 18 நாட்களில் குறைகள் தீர்க்கப்பட்டன.
2023 மே மாதத்தில் தொடர்ந்து 10-வது மாதமாக ஒரே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குறைதீர்ப்பு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
12 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் 2023 மே 31-ன் படி ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளன.
20,220-க்கும் மேற்பட்ட முறையீட்டு மனுக்கள் பெறப்பட்ட நிலையில், 19,553 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
2023 மே மாதத்தில் பிஎஸ்என்எல் தொடர்பு மையத்திற்கு 60,567 குடிமக்கள் பின்னூட்டம் அளித்திருந்தனர். இதில் சுமார் 35 சதவீதம் பேர் தங்களது குறைகளுக்கு தீர்வு காணப்பட்டதாக திருப்தி தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932238
***
AD/IR/RS/GK
(Release ID: 1932336)
Visitor Counter : 137