எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய நீர்மின் கழகத்தின் இயக்குநராக (பணியாளர்கள்) திரு உத்தம் லால் பொறுப்பேற்பு

Posted On: 14 JUN 2023 10:59AM by PIB Chennai

இந்தியாவின் முன்னணி நீர் மின் நிறுவனமான தேசிய நீர்மின் கழகத்தின் இயக்குநராக (பணியாளர்கள்) திரு உத்தம் லால் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதற்கு முன்பு தேசிய அனல்மின் கழகத்தின் தலைமை பொது மேலாளராக அவர் பதவி வகித்தார். பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள் மற்றும் பெருநிறுவன சமூக பொறுப்பு உள்ளிட்ட துறைகளில் 35 ஆண்டு கால அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். எரிசக்தித் துறையில் தமது நிபுணத்துவம் மற்றும் நீண்டகால அனுபவத்திற்கு பெயர் பெற்றுள்ள திரு உத்தம் லால், நிறுவனத்தின் இலக்கு மற்றும் தொலைநோக்குப் பார்வையின் சேவையுடன் மனித வள திறனை இணைக்கும் பணியில் முனைப்புடன் ஈடுபட்டார்.

ராஞ்சியில் உள்ள சேவியர் சமூக அறிவியல் நிறுவனத்தில் பணியாளர் மேலாண்மை மற்றும் தொழில்துறை உறவுகளில் முதுநிலை டிப்ளமோ பட்டத்தையும், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்பையும் அவர் பயின்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1932176

***

 

AD/BR/GK


(Release ID: 1932248) Visitor Counter : 137


Read this release in: English , Urdu , Hindi , Telugu