பாதுகாப்பு அமைச்சகம்

சென்னை காட்டுப்பள்ளியில் எல் & டி துறைமுகத்தில் ஏஎஸ்டபிள்யு-எஸ்டபிள்யுசி (ஜிஆர்எஸ்இ) மூன்றாவது அஞ்சாதிப் கப்பல் அறிமுகம் மற்றும் 7-வது கப்பலின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி 2023, ஜூன்-13 அன்று நடைபெற்றது

Posted On: 13 JUN 2023 5:57PM by PIB Chennai

சென்னை காட்டுப்பள்ளியில் எல் & டி துறைமுகத்தில்  ஏஎஸ்டபிள்யு-எஸ்டபிள்யுசி மூன்றாவது அஞ்சாதிப் கப்பல் அறிமுகம் மற்றும் 7-வது  கப்பலின் கட்டுமானப் பணிகள் தொடக்க நிகழ்ச்சி 2023, ஜூன்-13 அன்று நடைபெற்றது. இந்த கப்பல்கள் ஜிஆர்எஸ்இ நிறுவனத்தால் இந்திய கடற்படைக்காக கட்டப்படுவதாகும். இந்த நிகழ்ச்சிக்கு வைஸ் அட்மிரல் ஆர்பி பண்டிட் தலைமை வகித்தார்.  

கார்வார் அருகே அமைந்துள்ள அஞ்சாதிப் தீவின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் இந்த கப்பலுக்கு அஞ்சாதிப் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது 7-வது ஏஎஸ்டபிள்யூ எஸ்டபிள்யூசி கப்பல் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

8 ஏஎஸடபிள்யூ எஸ்டபிள்யூசி கப்பல்களை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் 29 ஏப்ரல் 2019 அன்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கும் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் (ஜிஆர்எஸ்இ) நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்தானது. தற்போது ஜிஆர்எஸ்இ நிறுவனத்தில் நான்கு கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. மீதமுள்ள கப்பல்களின் கட்டுமானம் காட்டுப்பள்ளியில் உள்ள எல் & டி கப்பல் கட்டுமான நிறுவனத்திடம்  துணை ஒப்பந்தமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடலோர பகுதிகளில் எதிரிகளின் நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகள், குறைந்த தீவிரம் கொண்ட கடல்சார் நடவடிக்கைகள் (லிமோ) மற்றும் கரையோர பரப்பில் நிலத்தடிப்பகுதி கண்காணிப்பு, கண்ணிவெடிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றை மேற்கொள்ளும் வகையில், இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 77 மீட்டர் நீளமுள்ள ஏஎஸ்டபிள்யூ எஸ்டபிள்யூசி கப்பல்கள் 900 டன் எடைத்திறன் கொண்டதாகும்.

ஆறு மாத இடைவெளியில் ஒரே தரத்திலான மூன்று கப்பல்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு, தற்சார்பு இந்தியா என்ற அரசின்  தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் முதல் கப்பலை டிசம்பர் 23-ம் தேதிக்குள்  கடற்படையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏஎஸ்டபிள்யூ எஸ்டபிள்யூசி கப்பல்கள் 80 சதவீதத்துக்கும் அதிகமான உள்நாட்டு உற்பத்திப் பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. இதன் மூலம் பெரிய அளவில் பாதுகாப்பு உற்பத்தித் திறன் உறுதி செய்யப்படுவதுடன், வேலைவாய்ப்பு மற்றும் திறன் கட்டமைப்பு அதிகரிக்கப்படுகிறது.

***



(Release ID: 1932111) Visitor Counter : 126


Read this release in: Hindi , Urdu , English