சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
உயர்நிலை தணிக்கை அமைப்பு-20-ன் கோவா உச்சிமாநாட்டில் நீலப்பொருளாதாரம் மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு முன்னுரிமை அளித்திருப்பதோடு உயர்நிலை தணிக்கை அமைப்புகளுக்கிடையே ஒத்துழைப்பு மற்றும் அறிவுப்பகிர்தலையும் ஊக்கப்படுத்தியுள்ளது
Posted On:
12 JUN 2023 1:56PM by PIB Chennai
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் உயர்நிலை தணிக்கை அமைப்பு-20 உச்சிமாநாடு இன்று கோவாவில் தொடங்கியது. இந்திய தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி திரு கிரிஷ் சந்திர முர்மு இந்த உச்சிமாநாட்டுக்குத் தலைமை தாங்கினார்.
நீலப் பொருளாதாரத்தின் தணிக்கை, வெளிப்படைத்தன்மையுள்ள நல்ல நிர்வாகத்தை உறுதிசெய்ய பொறுப்புள்ள செயற்கை நுண்ணறிவு, மனிதகுலத்தின் மீதான இவற்றின் ஆக்கப்பூர்வ தாக்கத்தை அதிகப்படுத்துதல் ஆகியவற்றில் உயர்நிலை தணிக்கை அமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பது பற்றி அவர் தமது தொடக்க உரையில் எடுத்துரைத்தார்.
நீடித்த தன்மை, வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்களின் பங்கு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரித்த அவர், நீலப்பொருளாதாரம் மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுக்கு இந்த மாநாடு முன்னுரிமை அளிப்பதாகக் கூறினார். உலகளாவிய அனுபவம் மற்றும் முன்முயற்சிகளையும் இந்தப் பிரிவுகளில் உருவாகிவரும் தணிக்கையின் பங்களிப்புக் குறித்த வெளிநாட்டு பங்குதாரர்களின் கருத்து என்ன என்பதையும் அறிந்து கொள்ள நேர்மையான ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். அரசு மற்றும் தனியார் துறை நிபுணர்கள் பல தளங்களில் இது குறித்து கலந்துரையாடியிருப்பதோடு கடந்த சில மாதங்களில் இந்த மையப்பொருள்கள் மீது கருத்தரங்குகளும் நடத்தியுள்ளன என்று திரு கிரிஷ் சந்திர முர்மு தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாட்டில் தொடக்கவுரையாற்றிய கோவா மாநில ஆளுநர் திரு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை, நிர்வாகத்தை வலுப்படுத்துவதிலும், மக்களின் வாழ்க்கையில் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை உருவாக்குவதிலும் ஜி-20 சார்பில் நடைபெறும் உயர்நிலை தணிக்கை அமைப்பு-20 உச்சிமாநாடு முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். நிர்வாகத்தில் பொறுப்புத்தன்மை, பயன்பாட்டுத்தன்மை, ஒருங்கிணைப்பை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கு அந்தந்த நாட்டில் முக்கியத்தூணாக உயர்நிலை தணிக்கை அமைப்பு விளங்குகிறது என்று ஆளுநர் தெரிவித்தார்.
இந்த உச்சிமாநாட்டில் ஆஸ்திரேலியா, பிரேசில், கொரியா, இந்தியா உள்ளிட்ட ஜி20 உறுப்புநாடுகள், பங்களாதேஷ், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட விருந்தினர் நாடுகளில் இருந்தும், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் இருந்தும் தூதுக்குழுவினர் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931623
***
AP/SMB/AG/GK
(Release ID: 1931703)
Visitor Counter : 164