நிதி அமைச்சகம்

இமாச்சலப்பிரதேசத்தில் தோட்டக்கலையை மேம்படுத்த 130 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியும், இந்தியாவும் கையெழுத்தி்ட்டுள்ளன

Posted On: 12 JUN 2023 2:14PM by PIB Chennai

இமாச்சலப்பிரதேசத்தில் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க வேளாண் உற்பத்தித் திறனைக் கூடுதலாக்கவும், பாசன வசதியை மேம்படுத்தவும் தோட்டக்கலை வேளாண் வணிகத்தை ஊக்கப்படுத்தவும் 130 மில்லியன் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசும்,  ஆசிய வளர்ச்சி வங்கியும், கையெழுத்திட்டுள்ளன.

 இந்த ஒப்பந்தத்தில் மத்திய அரசு சார்பில் மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் திரு ரஜத் குமார் மிஸ்ராவும்,  ஆசிய வளர்ச்சி வங்கி சார்பில் அதன் இந்தியாவுக்கான இயக்குநர் திரு டேக்கோ கொனிஷியும் கையெழுத்திட்டனர்.

இமாச்சலப்பிரதேசத்தின் தென்பகுதிகளில் மிதமான வெப்பமண்டல தோட்டக்கலையை மேம்படுத்த இந்தக் கடன் ஒப்பந்தம் உதவும் என்று திரு மிஸ்ரா தெரிவித்தார். இதன் மூலம் இம்மாநிலத்தின் ஊரகப்பகுதிகளில் பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு கூடுதலாகும் என்பதோடு பல்வகையான பயிர்கள் உற்பத்திக்கான வாய்ப்புகளும் ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1931629

***

AD/SMB/AG/GK



(Release ID: 1931671) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi , Telugu