பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா, ஃபிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் முதலாவது கடல் சார்ந்த கூட்டுப் பயிற்சி நிறைவடைந்தது

Posted On: 09 JUN 2023 4:32PM by PIB Chennai

 

இந்தியா, ஃபிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றின் கப்பல் படைகள் பங்கேற்ற முதலாவது முத்தரப்பு கூட்டுப் பயிற்சி ஜூன் 7,8 தேதிகளில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருப்பது வரலாற்றில் முத்தரப்பு ஒத்துழைப்பு சாதித்துள்ள மற்றொரு முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும்.

இந்தக் கூட்டுப்பயிற்சி மூன்று நாடுகளின் கப்பற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டது. கடற்பகுதியில் ஏற்படும் பாரம்பரிய மற்றும்  பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கும் இது வழிவகுக்கும்.  கடல்சார்ந்த வணிகத்தை உறுதி செய்வதில் ஒத்துழைப்பை இது அதிகரிப்பதோடு, இந்தப் பிராந்தியத்தின் கடற்பகுதியில் சுதந்திரமான கப்பல் போக்குவரத்துக்கும்  பயன்படும்.

***

 

AP/SMB/RR/GK


(Release ID: 1931058) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Marathi , Hindi