பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஐசிஏ மற்றும் என்ஏஎல்எஸ்ஏஆர் நிறுவனங்களில் திவால் மற்றும் திவால் சட்டங்கள் குறித்த படிப்பு அறிமுகம்

Posted On: 08 JUN 2023 5:00PM by PIB Chennai

ஐதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய கார்ப்பரேட் நிறுவன விவகாரங்களுக்கான நிறுவனம் புது தில்லியில் திவால் மற்றும் திவால் சட்டங்களில் எல்.எல்.எம் என்ற புதிய படிப்பு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படும் இத்திட்டத்தை இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளர் திரு. மனோஜ் கோவில், ஐஐசிஏவின் இயக்குநர் மற்றும் சிஇஓ திரு.பிரவீன் குமார் முன்னிலையில் தொடங்கினார்.

கூட்டத்தில் உரையாற்றிய திரு.கோவில், திவால் மற்றும் திவால் சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்த ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் படிப்புகளை வழங்குவதில் ஐஐசிஏ முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருவதை பாராட்டினார். திவால் சட்டத்தில் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவதே இந்தப் படிப்பின் நோக்கம் எனவும் அவர் கூறினார்.

ஐஐசிஏவின் இயக்குநர் ஜெனரல் மற்றும் சிஇஓ திரு.பிரவீன் குமார், ஹைதராபாத்தில் உள்ள என்ஏஎல்எஸ்ஏஆர் சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் கே.வித்யுல்லதா ரெட்டி மற்றும் ஐஐசிஏவின் கார்ப்பரேட் சட்டப் பள்ளியின் தலைவர் டாக்டர் பைலா நாராயண ராவ் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் பேசினர்.

இரண்டு வருட முழு நேர படிப்பாக வழங்கப்படும் இந்த எல்.எல்.எம். பட்டப்படிப்பு, நான்கு செமஸ்டர்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்புக்கான விண்ணப்பப் பதிவு 2023 ஜூன் 8-ம் தேதி தொடங்கி 2023 ஜூலை 31 அன்று முடிவடையும். மாணவர்கள் www.nalsar.ac.in என்ற இணையதளத்தில் ஜூலை 31, 2023 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930790

***


(Release ID: 1930863) Visitor Counter : 171


Read this release in: English , Urdu , Hindi , Marathi