இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஃபிட் இந்தியா 2022 விநாடி வினா போட்டியின் மாநில அளவிலான சுற்றுகள் ஃபிட் இந்தியா இயக்கத்தின் வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
07 JUN 2023 5:51PM by PIB Chennai
ஃபிட் இந்தியா 2022 விநாடி வினா போட்டியின் மாநில அளவிலான சுற்றுகள், ஃபிட் இந்தியா இயக்கத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. ஜூன் 10-ம் தேதி முதல் 2-வது ஃபிட் இந்தியா விநாடி வினா போட்டிகள் அதிகாரப்பூர்வ யூடியூப் மற்றும் முகநூல் பக்கங்களில் ஒளிபரப்பப்பட உள்ளன. மொத்தம் 84 பகுதிகள் ஃபிட் இந்தியா இயக்கத்தின் சமூக வலைதளப் பக்கங்களில் ஒளிபரப்பப்படும்.
36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 348 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. 2023 மே மற்றும் ஜூன் மாதங்களில் 120 சுற்றுப் போட்டிகள் நடைபெறுகின்றன. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அளவில் நடைபெறும் இறுதிப் போட்டி தூர்தர்ஷனிலும் ஒளிபரப்பு செய்யப்படும்.
பள்ளிகளுக்கு இடையிலான 2-வது ஃபிட் இந்தியா மற்றும் விளையாட்டு தொடர்பான விநாடி வினா போட்டிகளைக் 2022, ஆகஸ்ட் 29-ம் தேதி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் தொடங்கிவைத்தார். நாட்டில் உள்ள 702 மாவட்டங்களில் 16,702 பள்ளிகளைச் சேர்ந்த 61,981 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க சுற்றுகளுக்குப் பின்னர் 348 பள்ளிகளைச் சேர்ந்த 418 மாணவர்கள் மாநில மற்றும் யூனியன் பிரதேச அளவிலான சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 39 சதவீதம் பேர் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930546
***
AP/PLM/KPG/GK
(வெளியீட்டு அடையாள எண்: 1930596)
வருகையாளர் எண்ணிக்கை : 190