எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

எரிசக்தித் துறைக்கான புதிய தொழில்நுட்பங்களை உள்நாட்டில் தயாரிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர் சிறப்பு ஆராய்ச்சிக்கான இயக்கம் அறிமுகம்

Posted On: 07 JUN 2023 10:27AM by PIB Chennai

எரிசக்தி துறையில் பயன்படுத்தப்படும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை விரைவாகக் கண்டறிந்து, அவற்றை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பயன்படுத்துவதற்காக அதிக எண்ணிக்கையில் உள்நாட்டிலேயே உருவாக்குவதற்காக மத்திய எரிசக்தி அமைச்சகமும், மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகமும் இணைந்து தேசிய இயக்கம் ஒன்றை அறிமுகப்படுத்துகின்றன. “மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர் சிறப்பு ஆராய்ச்சிக்கான இயக்கம்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தேசிய இயக்கம், உள்நாட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை வலுப்படுத்தி, எரிசக்தித் துறையில் வளர்ந்து வரும் மற்றும் சமீபத்திய தொழில்நுட்பங்களை செயல்முறைபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிந்து, அவற்றை அமல்படுத்துவதன் வாயிலாக எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கான ஆதார எரிபொருளாக அதை மாற்றி, அதன் வாயிலாக உலகின் உற்பத்தி முனையமாக இந்தியாவை மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இரு அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் இயங்கும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நிதி உதவியோடு இந்த இயக்கம் செயல்படுத்தப்படும். கூடுதல் நிதி தேவைப்பட்டால், இந்திய அரசின் நிதிநிலை ஆதாரங்களில் இருந்து திரட்டப்படும். 2023-24 முதல் 2027-28 வரையிலான 5 ஆண்டுகளுக்கு முதற்கட்டமாக இந்த இயக்கத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்த இயக்கம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய எரிசக்தி மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு ஆர்.கே. சிங், நிகர பூஜ்ஜியம் வெளியீடுகளை அடையவும், மேக் இன் இந்தியா மற்றும் ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற முன்முயற்சிகளை ஊக்குவிக்கவும் இந்த இயக்கம் உந்துசக்தியாக செயல்படும் என்று தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதிலும் இந்த முன்முயற்சி முக்கிய பங்காற்றும், என்றார் அவர்.

எரிசக்தித் துறையில் புத்தகம் மற்றும் ஆராய்ச்சி மொழிபெயர்ப்புக்கான சூழலியலை உருவாக்குவதற்காக ‘மேம்படுத்தப்பட்ட மற்றும் உயர் சிறப்பு ஆராய்ச்சிக்கான இயக்கம்’ தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் அரசின் ஒருங்கிணைப்போடு செயல்படுத்தப்படும் என்று எரிசக்தித் துறைச் செயலாளர் திரு அலோக் குமார் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1930368

***

AD/BR/GK(Release ID: 1930418) Visitor Counter : 130


Read this release in: English , Urdu , Hindi , Telugu