பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலக சுற்றுச்சூழல் தினம்- இந்திய ராணுவம் கொண்டாடியது

प्रविष्टि तिथि: 05 JUN 2023 5:35PM by PIB Chennai

தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள மானக்ஷா மையத்தில் ‘சுற்றுச்சூழல் கருத்தரங்கு’ மற்றும் ‘கண்காட்சி’யுடன் உலக சுற்றுச்சூழல் தினத்தை திங்களன்று இந்திய ராணுவம் கொண்டாடியது. நாடு முழுவதும் உள்ள இந்திய ராணுவத்தின் தளங்களில் 2023 மே மாதம் 3-ம் வாரத்தில் தொடங்கி நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்கள், தூய்மை செயல்பாடுகள் ஆகியவற்றைக் குறிப்பதாகவும் இந்த நிகழ்வு அமைந்தது.

இந்த நிகழ்வுக்கு ராணுவ துணைத்தலைமை தளபதி லெப்டினென்ட் ஜென்ரல் எம் வி சுசீந்திரகுமார் தலைமை தாங்கினார். லெப்டினென்ட் ஜென்ரல்  ராஜீந்தர் திவான், வைஸ் அட்மிரல் சந்தீப் நைதானி, ஏர்மார்ஷல் ஆர் கே ஆனந்த், முப்படைகளின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

‘பசுமையைப் பாதுகாக்கும் ஆலிவ் பசுமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பிரபல சுற்றுச்சூழல் வல்லுநர்கள் உரைநிகழ்த்தினர். கழிவுப்பொருள் மேலாண்மை, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை, நிகர பூஜ்ய வீடுகளும், அலுவலகங்களும்  போன்ற முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து இவர்கள் உரையாற்றினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929969

***

AD/SMB/AG/GK


(रिलीज़ आईडी: 1930019) आगंतुक पटल : 169
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी