மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ஒருங்கிணைந்த மருத்துவசேவைகளுக்கான தேர்வுகள், 2022- இறுதி முடிவுகள் வெளியீடு

Posted On: 02 JUN 2023 3:31PM by PIB Chennai

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் 2022-ம் ஆண்டு ஜூலை 17-ந் தேதி நடத்திய ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் 2023-ம் ஆண்டு  ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்திய நேர்முக தேர்வு (பர்சனாலிட்டி டெஸ்ட்) ஆகியவற்றில் தேர்வானவர்கள்  இரண்டு பிரிவுகளின் கீழ் பின்வரும் பணிகளுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.

பிரிவு-1

மத்திய சுகாதாரத்துறையின் பொதுப்பணி மருத்துவ அதிகாரி

பிரிவு-2

அ) ரயில்வேயில் உதவி மண்டல மருத்துவ அதிகாரி

ஆ) புதுதில்லி நகராட்சி கவுன்சிலில் பொதுப்பணி மருத்துவ அதிகாரி

இ) கிழக்கு, வடக்கு, தெற்கு புதுதில்லி நகராட்சிகளில் பொதுப்பணி    
    மருத்துவ அதிகாரி

பிரிவு 1-ன் கீழ் 314 பேரும், பிரிவு-2ன் கீழ் 373 பேரும் பணியில் அமர்த்தப்படவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929357

***

SM/ES/AG/GK



(Release ID: 1929464) Visitor Counter : 145


Read this release in: English , Urdu , Hindi , Marathi