ரெயில்வே அமைச்சகம்

ரயில்வே அமைச்சகத்தின் ஆலோசனைக் குழுக் கூட்டம் நடைபெற்றது

Posted On: 01 JUN 2023 5:08PM by PIB Chennai

ரயில்வே அமைச்சகத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழுக் கூட்டம் புதுதில்லியில் இன்று நடைபெற்றது இந்திய ரயில்வேயின் உணவு சேவை, ரயில் நிலையங்கள் மேம்பாடு  ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாள்தோறும் 1.8 கோடி பயணிகள் இந்திய ரயில்வே மூலம் பயணிப்பதாகவும், அவர்களுக்குப் போதுமான உணவு வசதிகள், உறுதி செய்யப்பட்டு வருவதாகவும் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மொத்தம் 473 இணை ரயில்களில் உணவுத் தயாரிப்புப் பிரிவுகளும், 706 இணை ரயில்களில் உணவு வழங்கும் வசதியும் உள்ளதாக கூறப்பட்டது. அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் 1,275 ரயில் நிலையங்கள்  மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது மதிப்புமிக்க கருத்துக்களைத் தெரிவித்தனர். அதற்காக  ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1929060

----

AD/IR/KPG/GK



(Release ID: 1929151) Visitor Counter : 183