சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தில், மத்திய சுகாதார அமைச்சகம், புகையிலைப் பொருட்களை ஆன்லைனில் சித்தரிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான ஓடிடி வழிகாட்டுதல்களை வெளியிட்டது

प्रविष्टि तिथि: 31 MAY 2023 7:26PM by PIB Chennai

உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தன்று, மத்திய சுகாதாரத்துறை  அமைச்சர், டாக்டர் மன்சுக் மாண்டவியா, ஆன்லைன் உள்ளடக்கத்தில் புகையிலைப் பொருட்களை  சித்தரிப்பதை ஒழுங்குபடுத்துவதற்கான ஓடிடி வழிகாட்டுதல்களை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு எஸ். சிங் பாகேல் முன்னிலையில் வெளியிட்டார். புகையிலைப் பொருட்கள் அல்லது அவற்றின் பயன்பாடு ஆகியவற்றைக் காண்பிக்கும் ஆன்லைன்  உள்ளடக்கத்தை வெளியிடுபவர்கள் குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும். மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 2023 ஆம் ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தைக் கடைப்பிடிக்க ஒரு நிகழ்ச்சியை இன்று இங்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் "எங்களுக்கு உணவு தேவை, புகையிலை அல்ல" என்பதாகும்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் மன்சுக் மாண்டவியா, நமது நாட்டின் எதிர்காலமாக விளங்கும் இளம் தலைமுறையினரிடையே அதிகரித்து வரும் புகையிலை நுகர்வு குறித்து கவலை தெரிவித்தார்.  புகையிலையின் பிடியிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுமாறு  மத்திய சுகாதார அமைச்சர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

"புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீவிரமான  தீங்கு விளைவிக்கும் விளைவுகள் குறித்து இளைஞர்கள் மத்தியில் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நேரம் இது" என்று டாக்டர் மாண்டவியா கூறினார். மக்கள் இயக்கத்தின் வாயிலாக பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கான யோசனையை அவர் முன்வைத்தார். புகையிலைப் பழக்கத்திலிருந்து மக்களை விடுவிக்கவும், புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியாவால், இன்றைய ஓடிடி வழிகாட்டுதல்கள் புகையிலை நுகர்வைத் தடுக்க நீண்ட தூரம் செல்லும் என்று அவர் எடுத்துரைத்தார்.

******

AP/PKV/KRS


(रिलीज़ आईडी: 1928806) आगंतुक पटल : 274
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Marathi